அந்த ஆய்வு முன்னுரையில் இவருக்கு முன்பு பல முனைவர் பட்டங்கள் வழங்கப் பட்டுள்ளதைக் கூறியும், தெய்வநாயகத்தின் "விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு"ஆய்வைப் போற்றியும் இருந்தார்.
முனைவர். ஜான் ஜெபராஜ்க்கு போனில் பேசி பன்னாட்டு பல்கலை கழகங்களில் விவிலிய ஆய்வின் இன்றைய நிலைகள் பற்றிக் கேட்டால் அவருக்கு ஏதும் அறிந்தமையாக தெரியவில்லை.
தெய்வநாயகத்திற்கு முனைவர் பட்டம் தந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் -“ஆராய்ச்சி நூலல்ல” என்றும் சில பகுதிகள் இந்து சமயத்தினரின் மனம் புண்படும்படியாக அமைந்துள்ளது குறித்து வருந்துகிறோம்’என்றும் ஒரு சுற்றரிக்கை மூலம் குறிப்பிட்டது.
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வர பல்கலைக் கழகத்தில் நடந்த திருக்குறள் மாநாடில் கிறிஸ்துவ ஏசு சபை பாதிரியும் லயோலா கல்லூரி தமிழ் துறை தலைவரான பேராசிரியர் ராஜாமாணிக்கம்.
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் இயேசு சபையாளருமான Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept Loyala College, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.
இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar
பேராசிரியர் காமாட்சி சீனிவாசன், இலங்கையில் சைவராகப் பிறந்தவர், கிறிஸ்துவராக மதம் மாறியவரிடம், இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிற்குப் பின் அனைத்து பல்கலைக் கழகங்கள் இணைந்து உருவாக்கிய "குறள் பீடம்" சார்பாக திருக்குறளும்-விவிலியமும்" "குறள் கூறும் சமயம்" "குறள் கூறும் சமுதாயம்" என 3 ஆராய்ச்சி நூல்கள் தந்தார். அவர் புலவர் தெய்வ நாயகம் பற்றி
//"மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போதே அவர் திருக்குறளை சரியாகப் புரிந்து கொண்டாரா என்பதுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு தூரம் கற்று அறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது//பக்கம்-216
No comments:
Post a Comment