Sunday, July 29, 2018

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.              -குறள் 259  புலான்மறுத்தல்  ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும்.
தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் குறள், மேலுள்ளதே. நாம் இக்குறளின் பல்வேறு உரைகளைப் பார்ப்போம்.
புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும். இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார்.
வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255:
மு.வ உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். குறள் 260
மு.வ உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
கடைசி குறட்பாவில், கொல்லாமை – புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர் என்கிறார்.
ஒருவன் கடவுள் அடைய வேளிவிகளை செய்ய வேண்டும், அது உயர்ந்த மேன்மையான ஒன்று, அதிலும் மேன்மையானது கொல்லாமை- புலால் மறுத்தல் என்பதை தெளிவாக சொல்ல இவ்வழியில் சொல்கிறார்.
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்  -உவமேயம், உவமை இரண்டிலே உவமையே உயர்ந்தது என்பது இலக்கணம் காட்டும் வழி. தொல்காப்பிய உவமயியலின் நூற்பா ஒன்று- "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை"
தொல்காப்பிய நூற்பா குறிப்பது - உவமைக்கு வைப்பது உயர்ந்த பொருளாக வேண்டும் என்பதே. 
வேள்வி மிக உயர்ந்தது என்பதால் ‘ அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்....’ என்றார்.




உலகின் நாகரீகத் தொட்டில் - சிந்து சரஸ்வதி நாகரீகம் அதன் உச்சத்தில் 2 லட்சம் சதுர மைல்கள் பரவி இருந்தது, தொன்மை ஹரியானாவின் குருக்ஷேத்திரம் ஆருகிலுள்ள பிர்ரானாவில் கிடைத்த தொல்லியல் பொருட்களின்படி பொமு 7500 வரை செல்கிறது.

சிந்து சமவெளி நாகரீகம் 9,500 ஆண்டு பழமையானது
பொமு 4000 வாக்கிலேயே வேள்வி குண்டங்கள் என பலவும் தொல்லியல் அகழ்வில் கிடைத்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் உள்ள மொஹஞதாரோ ஹரப்பா என நம் பாடங்களில் கிடைத்தவை தாண்டி பல இடங்களில் மிகத் தெளிவான தரவுகள் கிடைத்துள்ளன.
 
                                                         காளிபங்கன் (ராஜஸ்தன்)  யூப சாலை
 ஹரியானாவில் பிர்ரானா,  ராஹிகார்ஹி, மெஹெர்கர்   தோலாவிரா லோத்தல்( முக்கிய துறைமுகம்-குஜராத்) 
மற்றும் காளிபங்கன் (ராஜஸ்தன்)
செம்பு செய்வதற்க்கு தாமிரத்தை எங்கிருந்து பெற்றனர்? – கேத்ரி சுரங்கம் (ராஜஸ்தன்).
சங்க இலக்கியத்தில்  நால் வேதங்கள்படியான வேள்வி பற்றிய பாடல்.  
நல்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பல்மாண்
வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி
யூபம்நட்ட வியன்களம் பலகொல்     (புறம்:15)

ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் (அகம்:181)

இன்று உலகின் பெரும்பாலான ஆய்வுகள் அனைத்தும் ஆங்கிலத்திலே நடைபெறுகிறது, தாய் மொழியில் பயின்றாலும் உலகின் ஒரு முக்கிய இணைப்பு மொழியாய் ஆங்கிலம் உள்ளது போலே பண்டை பாரத நாட்டில் வடமொழி இருந்துள்ளது. வடமொழியின் பேச்சு மொழியை ப்ராகிருதம், பாலி எனவும், செய்யுள் மொழியை சம்ஸ்கிருதம் எனவும் அழைக்கப் படுகிறது.

அசோகரின் 24 கல்வெட்டு இந்தியா முழுமையும் உளது, அதில் மைசூர் கல்வெட்டு மட்டுமே தமிழில் மீதம் அனைத்தும் வடமொழி தான்.  அசோகர் கல்வெட்டு பிராமி எனும் எழுத்துரு கொண்டுள்ளது, முதலில் வடமொழிக்கு உருவாக்கப்பட்டது, பின் தமிழிற்கு பயன்படும்போது "ழ", 
"ள", "ற" &  " போன்ற தமிழின் தனி சிறப்பு ஒலி எழுத்துக்களுக்கு உரு தர தமிழ் பிராமி உருவானது, அது பின் வட்டெழுத்து ஆகி, பின் நகரி என மாறியது, இன்று அனைத்து வட இந்திய மொழிகளும் நகரியோடு நின்றது, தமிழ் மேலும் சில மாற்றம் பெற்று இன்றைய வடிவம் பெற்றது.

தமிழர் இறை வழிபாட்டில் உலகைப் படைத்த கடவுளை ஆதி முதல் வழிபடுபவர்கள்.  தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள். 
அந்தணர் என்றால் - இறுதிப் பொருளை அணவுபவர் எனப் பொருள், வேதங்கள் - இறைவனை உலகின் இறுதிப் பொருளை ஆராய்பவர்கள்.    தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள் என திருக்குறளும் சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் காட்டுகின்றன. தொல்காப்பியரும், திருவள்ளுவரும் அந்தணரே.   வேதநெறி தமிழர்களின் மெய்யியல் ஆகும் .
பார்ப்பான்- வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.

வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்       80   
 செந்நிறம் புரிந்தோன் செல்லல்  நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
 காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து
தேவந் திகையைத் தீவலஞ் செய்து                 சிலப்பதிகாரம் வரந்தரு காதை

5000 வருட சிந்து சரஸ்வதி நாகரீகத்தில் சம்ஸ்கிருதப் பங்கு உள்ளது என பேராசிரியர் அஸ்கோ பர்போலா பேட்டி







தமிழர் சமயத்தில் இறை வழிபாட்டின் முக்கிய வழிகாட்டிகள் அந்தணர்

அந்தம் + அணவுபவர் - இறைவனை அடைய  உலகின் இறுதிப் பொருளான  வேதங்களை அணவுபவர் எனப் பொருள்படும்

 தமிழர் சமயத்தின் ஆதி நூல் வேதங்கள், அவை ஏட்டில் எழுதாமல் குருவிடம் கேட்டு அறிதல் முறையிலே தான் கற்க இயலும், எழுதாமையால் அது மறை எனப் படும், ஒத்து கூறி ஓதுவதால் ஓத்து எனப் படும்.
 வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை.  அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 
எழுதாக் கற்பினின் சொலுள்ளும்   குறுந்தொகை 156. 5-6
  3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)

திருவள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி உரைப்பார்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
நாமக்கல் கவிஞர் உரை
அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள் - அறநூல்களை மறப்பர்


பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்” – 24 பதிற்றுப் பத்து
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்         பாட்டு – 74 
பல போலி தமிழ் பற்றாளர்கள் - பார்ப்பனர் வேறு அந்தணர் வேறு என அருவருப்பாய் பொய் கூறுவர், அவர்கள் கிறிஸ்துவ சர்ச் வழி திராவிடம் எனும்  தமிழ் பகைவர்கள் தமிழை காட்டு மிராண்டி பாஷை என்ற கயவர் வழி கூட்ட வழிமுறையினர்.  


பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் - 2:50-63
வையை என்ற தலைப்பில் தலைவன் கூற்று
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
தணிவின்று, வையைப் புனல். 50
தலைவன் கூற்று
‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60
அந்தணர் தோயலர், ஆறு.
‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
ஐயர், வாய்பூசுறார், ஆறு.

அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.
மனுஸ்ம்ருதியில் இதே பொருளுடன் உள்ள ஒரு அறிவுரையை மேலும் மேன்மைப் படுத்தி திருவள்ளுவர் இங்கே தந்துள்ளார்.
5.53. He who during a hundred years annually offers a horse-sacrifice, and he who entirely abstains from meat,obtain the same reward for their meritorious (conduct).
வேள்வியை உயர்த்தி தான் இங்கு சொல்கிறார்.
 "செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து."

மிக உயர்ந்ததான செவியுணவுக்கு அவியுணவு உவமையாகிறது.

வள்ளுவர் வேள்வியை மறுக்கும் சமண சமயத்தவராக இருந்தால் இவ்வாறு கூறுவாரா ?  வேள்விகளை வள்ளுவம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்னும் ஐயம் தேவையற்றது; வேள்வியில் தரப்படும் அவியுணவு, மறை ஓத்து, வேள்விகளை மையமாகக்கொண்ட அறுதொழில் இவற்றை வள்ளுவம் மறுக்கவில்லையே !

இயல்புடைய மூவர்

 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை                            (குறள்  41; இல்வாழ்க்கை )
இல்லறத்தில் வாழ்வான் தன் அறவாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர், துறவிகள் மற்றும் மனைத் தவநிலையில் உள்ள மூவக்கும்   நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான்

நம் மரபில் இல்வாழ்க்கை என்பது சமூகத்தில் அறம் வளர உதவவே, அதைத் தெளிவாய் வள்ளுவர் இக்குறளிலேயே நல்லாற்றின் நின்ற துணை என்கிறார்,

 இல் வாழ்க்கை என்பது குடும்பம் நடத்துபவன்,   நல்லாற்றின், நல்ல அறம், சமுதாயத்தில் இல் வாழ்வானினுடையது கூறுகிறார் தவிர - தன் குடும்பத்தை பராமரிப்பது அவன் கடமையும் எனவே இதில் நேரடியாய் குடும்ப உறுப்பினர்களைக்  பிரித்துக்  குறிக்கவில்லை என்பது தெளிவு, இதை விளக்க அடுத்த குறளைப் படித்தால் போதும் - (துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்  இல்வாழ்வான் என்பான் துணை), அடுத்த குறள் - ஐம்புலத்தார் ஓம்பல் எனக் கூறுகையில் குடும்பத்தை ஒக்கல் என நான்காவதாய் அனைத்து குடும்ப உறுப்பினரையும் போட்டு விட்டார்.

வள்ளுவர் இல்வாழ்வை இல்லறம் என்ற சொல்லை குறளில் சொல்லவே   இல்லை., நல்லாறு என்பது சமுதாயக் கடமை தான். திருவள்ளுவர் இந்திய தத்துவ ஞான மரபு வழியினர், எனவே அறிவு சார்பு வழியினர்,  அவர் இங்கு இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

சமண சமயத்தை சேர்ந்த மணக்குடவர் உரை திருவள்ளுவர் குறள் எழுதி 100 ஆண்டுக்குள் எழுதப் பட்டது - சமணர் உரை.

 நாம் மேலே பார்த்ததில் சமணர் உரை பார்த்தோம், பரிமேலழகருக்கு முந்தைய மற்ற உரை பரிபெருமாள் மற்றும் பருதியார் உரை அதையும் பார்ப்போம்



குறள் காலத்தில் வாழ்வை மாணவப் பருவம்(பிரம்மச்சார்யம்), குடும்ப வாழ்க்கை (க்ருஹஸ்தன்), துறவிகள் (சந்நியாசிகள்) மற்றும் மனத்தளவில் குடும்ப வாழ்க்கையை துறந்து ஒதுங்கி வானப்ரஸ்த நிலை வாழ்க்கை(வானப்ரஸ்தம்) எனப் பிரித்ததில்; குடும்ப வாழ்பவன் மற்ற மூவரையும் காத்தல் என உரையாசிரியர்கள் என அனைத்து பழைய உரைகள்  சமணர் உரை உட்பட கூறினர்.

திருவள்ளுவர் மிகத் தெளிவாய் ஒருவர் இவ்வுலகில் வாழ்வது எளியோர்க்கு உதவி புகழ் பெறவே என்பார். 

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு.          குறள் 231:  புகழ்
எளியோர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

இல்வாழ்வில் உள்ளோர் முதல் கடமை  செய்யும் தகுதியை கணவர் கோவலான் கொலையால் இழந்தேன் என கண்ணகி புலம்புவாள். 
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
                                         6. கொலைக்களக் காதை -சிலப்பதிகாரம்

19ம் நூற்றாண்டு முதல் கல்வி கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.

மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்
                                 - திரு வி க, வ சுப மாணிக்கம், இரா சாரங்கபாணி, குழந்தை
இளையர், முதியோர், பெண்கள் - ச தண்டபாணி தேசிகர்
உறவினர், நண்பர், ஏழைகள் நாமக்கல் இராமலிங்கம்.
பார்ப்பான், அரசன், வணிகன் தேவநேயப் பாவாணர்
சைவர், வைணவர், வைதிகர் 
அல்லது அரசன், ஆசான், ஆன்றோர் - மு கோவிந்தசாமி
 அறவோர், நீத்தார்,  அந்தணர் - கா அப்பாத்துரை
மாணவர், தொண்டர், அறிவர் - சி இலக்குவனார்
தாய், தந்தை, தாரம்           வ உ சிதம்பரம், இரா இளங்குமரன்

பெற்றோர், துணைவி, மக்கள் 
                          - கு ச ஆனந்தன், நெடுஞ்செழியன், கலைஞர், சுஜாதா.
கல்வி நிலை, மனைத் தவநிலை, துறவுநிலை நிற்பார் -கா சு பிள்ளை

குடும்பத்தாரைப் பிரித்து தாய், தந்தை, மனைவி, மகன் என்றெல்லாம் பிரிப்பதோ, தொடர்பற்று ஜாதிகளை திணிக்கும் கிறிஸ்துவ வெறி தேவநேயர் உரைகளோ வள்ளுவர் உள்ளம் இல்லை.

தமிழர் மெய்யியல் மரபு, வேதங்கள், இறை வணக்கம் என்பதை மாற்ற எத்தனை பாடுபடல்- எல்லாருமே  கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.







Saturday, July 28, 2018

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் இந்த வரியை அனைவரும் பல முறை பலரும் பயன்படுத்தி கேட்டுள்ளோம், அடுத்தவரியோடு முழு குறளையும் பார்ப்போம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  
செய்தொழில் வேற்றுமை யான்.             (குறள் 972: பெருமை)                            பிறப்பு ஒக்கும் – இயல்பு என்பது பிறப்பால் ஒன்றுதான்
எல்லா உயிர்க்கும் – யாவர்க்கும்
சிறப்பு ஒவ்வா – பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது
செய்தொழில் – அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள
வேற்றுமையான் – வேற்றுமைகளால்
எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் ஒரே தன்மையுடையது; செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக இருக்காது .
யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –( கணியன் பூங்குன்றனார்) எனும் கோட்பாடு படி  ஒருவன் செய்யும் செயல் அதில் உள்ள அறத்தின் பலன்(புண்ணியமே) உன் நிலையை தீர்மானிக்கும். வள்ளுவர் நீ இப்பிறவியில் செய்யும் அறத்தின் பயன் உன் அடுத்து எழும் பிறவிகளில் நல்லது செய்யும் என்பார்.

 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.             குறள்.36 அறன்வலியுறுத்தல்
பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழிந்த பின்பும் மறுமையில் அழியா துணையாகும்.

வள்ளுவர் ஒரு அரசன் தன் நாட்டை ஆளும் செங்கோல் பிராமணர்களின் வேதங்கள் மற்றும் அறநூல்களுக்கு அடிப்படையாய் இருக்க வேண்டும் என்பார்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.                குறள்.543   செங்கோன்மை
நாட்டைக் காக்கும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள்- அறநூல்களை மறப்பர்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.             குறள் 560  கொடுங்கோன்மை
ஒரு பெரும் சமுதாயத்தில் பணிக்கு ஏற்ப சட்டங்கள் அமையும்,  அஹிம்சையையும், புலால் மறுத்தலையும் போற்றி துறவரவியலில் கூறிய வள்ளுவர்.

சட்டம் - ஒழுக்கு என வருகையில் அது அவரவர் தொழில், தன்மைக்கு ஏற்ப மாறும் இதை நாம் திருக்குறளிலேயே காணலாம். அஹிம்சை, புலால் மறுத்தலை வலியுறுத்தும் வள்ளுவர் கொடியோரை (பாழ் செய்யும் உட்பகை இல்லாதபடிக்கு) - வயலைல் களை பிடுங்க் எரிதல் போலே மொழி - இனம் எனப் பிரிவினை தூண்டும் கொடியோரை வேரோடு அழிக்க வேணும் என்பார்

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.                 செங்கோன்மை குறள் 550
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.                      ஒற்றாடல்  குறள் 582
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்                    ஒழுக்கமுடைமை குறள் 134:
பிராமணன் தினமும் கூறும் வேதங்களை மறந்தாலும் மீண்டும் நினைவில் கொணரலாம், ஆனால்  தன் குடிப்பிறப்பு  ஆசாரத்தில்  குன்றினால் கெடு்ம்.

தமிழருள் பகைமூட்ட கிறிஸ்துவ நச்சுப் பரப்பல் செய்த தேவநேயப் பாவாணனைப் போலும், காலனி ஆதிக்க சர்ச் அடிமைகள் தமிழை காட்டிமிராண்டி எனப் பழித்த ஈ.வெ.ராமாசாமி வழி தமிழின் எதிரிகளும்
அற நூல் எழுதிய வள்ளுவரை வைத்து - இந்தக் குறள் மூலம் தமிழர் மெய்யியல் மரபை நிராகரிக்கிறார் என பிதற்றுவர்.

பொய்யான உரைகள்.
 சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான்.    என்பதை செய்யும் தொழிலால் வரும் வேறுபாட்டு சிறப்புகளும் பொருந்தாது என கதைக்கின்றனர்.

சிறப்பு ஒவ்வா உள்ள ஒவ்வா வேறோர் குறளிலும் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்.

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் 
மாணிழை கண் ஒவ்வேம் என்று.                   குறள் 1114:
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும். 

 ஒவ்வாக-  ஒப்பாக -சமமாக - ஈடாக- இணையா
சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான் -   செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
வள்ளுவர் மிகத் தெளிவய் ஒவ்வொருவரையும் அவரவர் தொழில் - தகுதி அடிப்படையில் தான் நோக்க வேண்டும் பொதுமைப் படுத்தி பார்க்கலாகாது எனவும் தெளிவாய் உரைக்கின்றார்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.               குறள் 528    சுற்றந்தழால்
 அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

திருக்குறளில் தெய்வப் புலவரே தெளிவாய் யோரோடு சேர வேண்டும் - தவறான மோசடியாளரோடு இணைந்தால் கேடு என்பதை-
.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.          குறள் 508:  தெரிந்துதெளிதல்
ஒருவரை  ஆராய்ந்து பார்க்காமல்  துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் தனக்கு மட்டும் அல்லாமல் அவரால் வருங்காலத் சந்ததியினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்
சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டம் அவரை தவறாய் வழிகாட்டும்
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு.          குறள் 452:  சிற்றினஞ்சேராமை
 நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்
 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு 
இனநலம் ஏமாப் புடைத்து.        சிற்றினஞ்சேராமை குறள் 458
நிறைகுணம் பெற்றவராக இருந்தாலும்  நன்கு கற்ற சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே  வலிமை அமையும் 

கிறிஸ்துவ மதமாற்ற வேசித்தனத்தால் தமிழரை ஆரியர் - திராவிடர் என பொய்யான மோசடி நச்சு பரப்புவோரோடு பழகும் தமிழறிஞர்கள் வள்ளுவத்தினை சிதைக்கும் உரை தவறான கூட்டு தான். 
நச்சு கிறிஸ்துவமும், தமிழை காட்டு மிராண்டி பாஷை; தமிழை அழிக்கவே திராவிடம் என சொல்லியோர் கூட்டத்தில் இணைவோர் திருக்குறளை இழிவு செய்கின்றனர்.

Monday, July 23, 2018

தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை              ( 43  இல்வாழ்க்கை)

மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.




பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.

தென்புலத்தார் என்பது இறந்த முன்னோரைக் குறிக்கும் என்பதை புறநானூறு 9ம் பாடல் எளிதாய் விளக்கும்.
 
 புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் 
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் 
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் 
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் 
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்......   (புறம்-9)  
                -   அக்காலத்  போர் நெறி காட்டும்.
போரிற்காய் நுழையும் அரசன் ஊரை வளைத்த உடன் - அந்த ஊரில் உள்ள  ஆனினம், அவ்வியல்புடைய பார்ப்பன மக்கள். பெண்டிர், பிணி உடையவர், இறந்த பின்னர் பித்ரு காரியம் தொடர்ந்து செய்ய வேண்டிய புதல்வர்ப் பெறாதோர் இவரகளை பத்திரமாக காக்கும்படி செய்வர். இவ்வாறு அறவழி நடக்கும் இயல்பும், துணிவும் உடையவனான எம் குடுமியே என மன்னர்

 நம் உயிரை எடுப்பவர் கூற்றுவன் (எமன்) எனப் பெயர், சிவபெருமான் கூறும்படி காலம் முடிந்தபின் உயிர் எடுப்பதால்;  வள்ளுவரும் மரணம் குறித்து -  கூற்றத்தை (குறள்-894)  கூற்றமோ (1085) கூற்று (326,765, 1083) கூற்றம் (269) எனப் பல குறள்களில் கூறி உள்ளார்.

முன்னோர் கடன் என்பது இறந்த உடன் சில தான-தர்மங்களும், பிண்டமிடல் போன்றவையும், பின் மாதா-மாதம் அமாவாசை அன்றும், மாதம் முதல் நாட்களிலும் மிகுந்த ஆசாரமுள்ளோரும், மற்றவர்கள் முக்கியமான நீர்நிலைகளில் முழுக்கிடுதலும் மரபு. வருடா வருடம் திதி தருதல்.

இந்த திதி நாட்களில் கோவிலிற்கு செல்லவும் கூடாது என்பர், அதாவது கடவுளிற்கு முன் தென்புலத்தார் கடன் - வள்ளுவரும் முதலில் அதை வைத்தார்.


தற்கால புலவர்களின் கயமை உரைகள்.
திருக்குறளிற்கு முதல் உரை மணக்குடவர் எனும் சமணர்; சமணத்தில் ப்த்ரு கடன் கிடையாது, ஆயினும் அவர் அதை அப்படியே கூறி உள்ளார்.

19ம் நூற்றாண்டு முதல் கல்வி கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.


 சாலை இளந்திரையன் - தென்னிலப் பகுதிகளில் உள்ளவர் 
 இலக்குவனார் -தென்னாட்டவர்
  இளங்குமரன் -தெளிந்த அறிவினர் 
குழந்தை - தென்னாட்டவர்
 வளன் அரசு (ஜோசப் ராஜ்) -வாழ்ந்து மறைந்தோர்
  க.ப.அறவாணன்- அரிய பெரிய வாழ்வு வாழ்ந்து மறைந்தோர் 

 தமிழர் மரபை ஏற்காது கிறிஸ்துவ நச்சுக் கருத்தின் அடிமைகளாய் எழுதப்பட்ட உரைகள்.