Friday, November 8, 2019

திருக்குறள் முதல் அச்சு பதிப்பு 1812

ஆங்கீரச ஆண்டு 1812 
https://commons.m.wikimedia.org/wiki/File:Thirukkural_Madras_1812.JPG?fbclid=IwAR3rL675CoV-iGzpPHWOTF-1kzDJ7K00gLVVcqTfl-P-s6BgR09zAHON6Y8
தமிழ் எண்களில் 1812 எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது."இ" என்பது இங்கிலீஷ் வருடம் என்பதன் சுருக்கமாக இருக்கவேண்டும். மாசத்தினச்சரிதை என்ற பெயரில் செய்தி இதழ் வெளியிட்ட அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டதாகத் தெரிகிறது. இதுவே முதல் அச்சுப்பிரதியாக இருக்கக்கூடும்
Description
English: First page of Thirukkural published in Tamil in 1812. This is the first known edition of Thirukkural
Date1812
SourceThirukkural published in Madras in 1812

Wednesday, November 6, 2019

திருவள்ளுவரின் 600 ஆண்டு தொன்மையான சிலை

சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை மூலவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கோயில். இக்கோவில் 16 ஆம் நூற்றாண்டடில் கட்டப்பட்டதாகும். இதனை 1970 களில் புதுப்பித்துள்ளனர். திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் கருதப்பெறுவதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. இக்கோவில் மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்கிறது.


தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். (40)
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி


திருவள்ளுவர் கோவிலில் சீரமைப்பு பணி 1972ல் செய்யத் தமிழக தொல்லியல் துறை முன்னிலையில் நடக்க் தோண்டியபோது ஒரு சிலை கிடைத்தது, அது 14ம் நூற்றாண்டு வள்ளுவர் சிலை என அடையாளம் காணப்பட்டது