Tuesday, March 26, 2019

திருக்குறளிற்கு உரை நடைமுறை



திருக்குறளிற்கு உரை எழுதுபவர் - இரண்டு முக்கியமான நடைமுறை பின்பற்ற வேண்டும்,
வள்ளுவர் குறளின் உள்ளேயே தன் அடிப்படையை மிகத் தெளிவாக கூறியுள்ளது புரிந்து, குறளின் உரைக்கு திருக்குறளே அடிப்படை எனக் கொள்வது.
உ-ம்.
வள்ளுவர் முழுமையான ஆஸ்திகர் - ஒருவன் கல்வி கற்பதே நீழும் முழுமையான அறிவினை உடைய இறைவன் தாழ் பற்றி கொள்ளவே (குறள்-2)
சங்க இலக்கியம், அதற்கு பின்பான தொல்காப்பியத்திற்கு பின்பானது திருக்குறள் காலம், இரட்டை காப்பியத்திற்கு முன்பானது, குறளின் உள்ள சொற்கள் இந்த நூல்களில் பயன் படுத்தப்பட்ட அதே பொருளில் தான் பயன் படுத்தி உள்ளார். 
குறள் இயற்றி 100 ஆண்டுகளுக்குள் எழுந்த சமணர் மணக்குடவர் உரையினை பிரதானமாகக் கொண்டே பரிமேலழகரும் உரை செய்துள்ளார்.

குறளின் அடிப்படைக்கு மாற்றாய், தங்கள் மூட நம்பிக்கைகளை வள்ளுவர் குறள் உரையில் திணித்தல் தவறு.

தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் 
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று. -         குறள் 259  புலான் மறுத்தல்



வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.


தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்(251) எனத் தொடங்கி  ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.(255)  புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர்(260) என முடிப்பார்.

Saturday, March 23, 2019

திருக்குறள் போற்றும் தர்ம சாஸ்திரங்கள்

 தமிழில் எழுந்த பல்வேறு  நூல்களில் திருக்குறள் மிகவும் உன்னதமானது உலகம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இந்திய தத்துவ ஞான மரபின் உள்ள அறிவு அறிவு அறக்கருத்துக்களை எளிய தமிழில் வழங்கியதே திருக்குறள்.
திருக்குறள் முழுவதும் குறள் வெண்பா என்னும் யாப்பில் அமைந்துள்ளது இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என்பது அறிஞர்கள் ஏற்க்கும் கருத்து.
திருக்குறள் இருக்கும் முதலில் எழுதப்பட்ட மிகவும் பழமையான உரை மணக்குடவர் உரை (10நூற்றாண், சமணரான மணக்குடவர் திருக்குறளை வேத தர்ம சாஸ்திர ஞானமரபில் வந்ததாகத்தான் பொருள் செய்துள்ளார்.
வள்ளுவர் பல்வேறு திருக்குறளில் முந்து நூல்களை சுட்டிக் காட்டுகிறார்.
அவை முறையே

வேத தர்ம சாஸ்திரங்களைக் குறிப்பவை 543,560, 21, 28, 134, 183, 322,37 & 46
அரசியல் நூல்களை  636, 693, 743, 581, 727
பொதுவாக   நூல்களை 533, 401, 726, 783, 373
மருத்துவம் சம்பந்தமானவை 941..

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.                  குறள் 183:   புறங்கூறாமை



மணக்குடவர் உரை:
காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.

அறநூல் எனும் தமிழ் சொல் வடமொழியின் தர்ம சாஸ்திரங்களைக் குறிக்கும், இவற்றை அந்தணர்கள் எழுதியவை.
சிலப்பதிகாரம்-15.அடைக்கலக் காதை
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல 55
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக் கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் 60…
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி 65
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் 70
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ 75
பார்ப்பனன் ஒருவன் தன் மனைவி செய்த பிழைக்கு பாவ நிவர்த்தி என வடமொழியில் கொடுத்த வாசகத்தைப் படித்து தர்ம சாஸ்திரபடி தானங்கள் செய்ய கோவலன் உதவியது உள்ளது.
 வள்ளுவரும் இதைத் தெளிவாக உரைப்பார்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.             குறள் 543:  செங்கோன்மை
மணக்குடவர் உரை: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.              குறள் 560:        கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்       குறள் 134:      ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
திருக்குறளை இழிவு செய்யும்  தமிழர் மெய்யியல் விரோத அராஜக உரைகள்
திருக்குறள் வேதங்களை - பிராமணர்களை குறிக்கும் சொற்களுக்கு அதன் நேரடி பொருள் உரையில் தராமல் மதச் சார்பற்ற முறையில்  பொருள் செய்யும் தமிழ் கயமை
மறை குறள் 27
பார்ப்பான், ஓத்து குறள் 134
அந்தணர் நூல் அறம் - குறள் 543
அறுதொழிலார் நூல்  - குறள் 560