Tuesday, March 26, 2019
திருக்குறளிற்கு உரை நடைமுறை
திருக்குறளிற்கு உரை எழுதுபவர் - இரண்டு முக்கியமான நடைமுறை பின்பற்ற வேண்டும்,
வள்ளுவர் குறளின் உள்ளேயே தன் அடிப்படையை மிகத் தெளிவாக கூறியுள்ளது புரிந்து, குறளின் உரைக்கு திருக்குறளே அடிப்படை எனக் கொள்வது.
உ-ம்.
வள்ளுவர் முழுமையான ஆஸ்திகர் - ஒருவன் கல்வி கற்பதே நீழும் முழுமையான அறிவினை உடைய இறைவன் தாழ் பற்றி கொள்ளவே (குறள்-2)
சங்க இலக்கியம், அதற்கு பின்பான தொல்காப்பியத்திற்கு பின்பானது திருக்குறள் காலம், இரட்டை காப்பியத்திற்கு முன்பானது, குறளின் உள்ள சொற்கள் இந்த நூல்களில் பயன் படுத்தப்பட்ட அதே பொருளில் தான் பயன் படுத்தி உள்ளார்.
குறள் இயற்றி 100 ஆண்டுகளுக்குள் எழுந்த சமணர் மணக்குடவர் உரையினை பிரதானமாகக் கொண்டே பரிமேலழகரும் உரை செய்துள்ளார்.
குறளின் அடிப்படைக்கு மாற்றாய், தங்கள் மூட நம்பிக்கைகளை வள்ளுவர் குறள் உரையில் திணித்தல் தவறு.
தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும்
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று. - குறள் 259 புலான் மறுத்தல்
வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்(251) எனத் தொடங்கி ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.(255) புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர்(260) என முடிப்பார்.
No comments:
Post a Comment