Saturday, June 23, 2018

தென்புலத்தார்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43)
இறந்த முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்

இறந்த முன்னோர்களுக்கு கடன் செய்தல் நமது சமயத்தின்ன் மிக முக்கியமானது.
இந்தியாவெங்கும் மக்கள் ஆறுகள், கடல் என முன்னோர் கடன் செய்யும் செய்திகள்


பல ஆசாரமான மக்கள் அமாவாசை மற்றும் முன்னோர் திதி நாட்களில் தெய்வ வழிபாட்டிற்கு கோவில் செல்ல மாட்டார்கள். தாய் - தந்தை இறந்து ஒரு வருடம் கோவில்கள் செல்லவே மாட்டர்கள்

தெய்வப் புலவர் வள்ளுவர் தெய்வத்திற்கு முன்பாகவே முன்னொர் கடனை வலியுறுத்தும் வரிசையில் தந்துள்ளார்.
.

மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.
தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
(பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)




  ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
5. எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசை கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
10. முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (9)

நோயாளிகள், தென்புல வாழ்ார்க்குப் பிதிர்க்கடன் செலுத்தும் கற்பிள்ளைகள் பெ ரு தோர் ❖ሄጫ இத்திறத்தார் பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே சென்று விடுதல் வேண்டு மென்னும் அறத்தாறு காரண மாக அறிவிக்கும் உயர் குறிக்கோள் ஒன்று இருந்ததாகப் பின் வரும் புறநானூற்றுப் பாடல் கொண்டு அறியலாம்.
“ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை பீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெருஅ தீரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறம்.” பாண்டியன் அறிவுடை நம்பி சங்க காலத்தில் பீடுற அரசோச்சிய பெருமன்னனுவான். புவி காவலகை விளங்கிய அவன் கவி நாயகனுகவும் விளங்கியிருக்கின்றான். அத்தகு அரசன் செல்வச் சிறப்பில் திளைத்திருந்திருப்பான் என்பதில் ஐயமில்லை. அம்மன்னன் பல செல்வங்களைப் படைத்திருப் பினும் குழந்தையாகிய குறைவற்ற செல்வம் ஒன்றனைப் பெருதவரிருட்பின் பயனில்லை என்று திட்டவட்டமாகத் தெளிவுற மொழிகின்றான். அவ்வாறு அவன் குழந்தைச் செல்வத்தின் ம r -ன் பி னே க் குறிப்பிடும்பொழுது குழந்தையின் ஒவியத்தினை நம் மனக்கண்முன் கொண்டு வந்து சிறுத்தி விடுகின்றான். இதோ அவன் வழங்கும் எழிற்காட்சி:
‘ படைப்புப பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை மீட்டி இட்டுக் தொட்டுங் கவ்வியும் துழந்தும்
3. புறநானூறு: 9:1-6

 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு:
பதவுரை: தென்-தென்திசை; புலத்தார்-இடத்திலுள்ளவர்; தெய்வம்-தேவர்; விருந்து-விருந்தினர்; ஒக்கல்-சுற்றத்தார்; தான் -தான்; என்று-என; ஆங்கு-(அசைநிலை).

.

தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐம்புலத்து ஆறு போற்றிக் காத்தல் தலையாய கடமையாம் என்பது பாடலின் பொருள்.
ஐம்புலத்து ஆறு என்றால் என்ன?

ஓம்பல் அல்லது ஓம்புதல் என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லாகும். இச்சொல் பேணுதல், போற்றுதல், காப்பாற்றுதல், பாதுகாத்தல், வளர்த்தல், தீங்கு வாராமற் காத்தல்; உபசரித்தல், சீர்தூக்குதல் என்ற பொருள்களைத் தரும். இங்கு போற்றுதல், காத்தல், பேணுதல் என்ற பொருள்களில் ஆளப்பட்டுள்ளது.
தலை என்பதற்கு முதன்மையான அல்லது சிறந்த என்பது பொருள்.

தென்புலத்தார்
தென்புலத்தாரை ஓம்புதல் எப்படி?
நம்மிடையே வாழ்ந்து மறைந்தோரை குறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவர்களும் அன்பிற்குரியவர்களும் இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதல் தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாகும். அவரை நினைத்து அடையாள முறையிற் சில உண்டிகளை, அவர் பெயரால், இரப்போர்க்கு சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல் ஆகும். இது இன்றும் நம் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்தாம். தென்புலத்தார் என்போர் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் அருள்பார்வை நம்மை வாழவைக்கும் என்பதும் நம்பிக்கை. நம்முடைய வாழ்க்கை முறையில் நம்முடைய முன்னோர்களை என்றும் மறப்பதில்லை. தெய்வம் கூட இரண்டாம் இடத்தில்தான். எனவேதான் வள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார்.
தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேர் பொருள் தெற்குத் திசையிலுள்ள இடத்தில் இருப்பவர் என்பது.
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்(புறநானூறு 9)
(பொருள்: தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய இறுதிச் சடங்குகளைப் பண்ணும்) என்ற சங்கச் செய்யுள் அடி ஒன்றில் தென்புலவாழ்நர் என்ற தொடர் இறந்தார் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. இறந்த வீரனுக்காக நடப்பட்ட கல்லுக்கு இறந்த நாளில், பூச்சூட்டிப் புகை காட்டிப் பொங்கலிட்டு எல்லாருடனும் இருந்து உண்டதாக (நடுகல் வணக்கம்) வரலாற்றுச் செய்தி உண்டு..
இறந்துபோன மூதாதையர் தென்திசையில் உறைவதாகத் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையுண்டு. அதனால் காலமாகிவிட்ட முன்னோர்களைத் தென்திசையிலுள்ளவர் எனக் கூறுவது ஒரு மரபு. பொதுவாக சுடுகாடு/இடுகாடு ஒரு ஊரின் தெற்குத் திசையில் அமையும். இதுவும் தென்புலம் என்ற வழக்குக்குக் காரணமாகலாம். காலிங்கர் தென்புலத்தார் என்பதற்கு தன்குடியில் இறக்கப்பட்ட பிதிரர் என்று பொருள் கூறியுள்ளார். 
தம் குடும்பத்தில் தோன்றி மறைந்தவர் நினைவுகளைப் பாதுகாப்பது தென்புலத்தார் ஓம்பல் ஆகும்.

தெய்வம்
தெய்வம் என்ற சொல் பல்வேறு நிலையில் ஐயப்பாட்டிற்கு இடமாகிறது என்பார் தண்டபாணி தேசிகர். தொல்காப்பியம் மற்றும் சங்க கால இலக்கியங்களில் பயின்று வரும் 'தெய்வம்' என்ற சொல், இனக்குழுக்களின் சிறு தெய்வங்களையே குறிக்கிறது என்பர். எல்லாம் கடந்த முழுமுதற் பொருளுக்குக் கடவுள் என்பது பெயர். மற்றக் கடவுளரை தெய்வம், சிறு தெய்வம் அல்லது தேவர் என்று அழைப்பர். பரிதி இக்குறளுக்கான தனது உரையில் தெய்வம் என்ற சொற்கு 'வழிபடு தெய்வம்' எனப் பொருள் கண்டிருக்கிறார். இங்கு சொல்லப்பட்ட தெய்வம் குலதெய்வத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இல்வாழ்வான் தெய்வத்தை ஓம்புதல் என்பது எவ்வாறு? இது தெய்வத்தைப் போற்றுவதைக் குறிக்கும். தெய்வத்தை நினைத்து வணங்குதலே தீமை செய்யாமைக்கும், உண்மை வழி நிற்பதற்கும் துணை செய்யும். கோயில்களில் செய்யப்படும் உணவுக் கொடையும் தெய்வ வழிபாட்டின் பாற்படும். குலதெய்வ வழிபாடு தெய்வத்திற்குச் செய்யும் கடன் ஆகும்.

விருந்து
விருந்து என்பது இங்கு விருந்தினரைக் குறிக்கும். முன்வந்து போனவரும் முன்னே அறியப்படாத அயலார் விருந்தினராவர். நாட்டால், மொழியால், சமயத்தால் அயல் வழியினர்; அறிமுகம் இல்லாதவர் விருந்தினராவர். விருந்தினர் எனப்படுபவர் நாடி வந்துள்ள அன்பர்கள்; அவர்களை மனம் நோகாதவாறு ஓம்புதல் பண்பாகும். இவர்களை வரவேற்று ஊண் உடை முதலியன வழங்கிப் பேணவேண்டும். இதனால் அயல்வழி உறவுகள் வளரும். குமுகாயம் விரிவடையும். புதிதாகத் தம் வீட்டை நாடி வரும் அயலார் யாவரே யாயினும் அவரை உவந்து வரவேற்று ஓம்புதல் அக்காலத்தில் மிகவும் வேண்டப்பட்டதாக இருந்தது. இது இல்லறத்தான் கடமையாயாகவும் இருந்தது எனத் தெரிகிறது. இன்றும் புதியவர்களுக்கு இயலும் வரை உதவவது அறச்செயல்தான்.

ஒக்கல்
ஒக்கல் என்பது சுற்றத்தைக் குறிப்பது. சுற்றம் என்பது இல்வாழ்வானது உடன் சுற்றமாகும். பிறப்பு மற்றும் திருமணத்தினால் உண்டான இயற்கையான உறவுகள், தொடர்புகள் இவற்றைக் குறிக்கும். சுற்றத்தார்களே உண்மையில் ஒருவரின் உடனடிச் சமூகம். இல்வாழ்வானது உடன்பிறந்தார் முதற்சுற்றம். அடுத்துத் தந்தை, தாய்வழி, உடன் பிறப்புச் சுற்றம், தம் வாழ்க்கைத் துணைவழி உடன்பிறப்புச் சுற்றம் என்றவாறு விரியும். 
சுற்றத்தினரைப் பேணுதல் என்பது அவர்தம் வாழ்க்கைத் தேவைகளைப் பெறுதற்குரிய வாயில்களை அமைத்துத் தருதல் என்பது. சுற்றம் பழகும் பழக்கங்களால் அகவுணர்வுகள் செழுமையாக வளர்ந்து பயன்தரும். அதனால் அடிக்கடி கண்டும் கலந்தும் மகிழ்ந்து உரையாடியும் கலந்து உண்டும், உதவிகள் செய்தும், உறவு நிலைகளைப் பேணுதல் இன்றியமையாதது. சுற்றத்தினரை ஓம்பல் குடும்பம் வளமையாக அமையத் தூணை செய்யும். உறவுகள் செழிப்பாக அமையாத சுற்றம் சுமையாகிவிடும் என்பர்.
செல்வ நிலையிலிருப்போர் தம் சுற்றத்தாரை ஓம்புதல் வேண்டற்பாலது என்ப்தனைச் 'சுற்றம் தழாஅல்' எனும் அதிகாரத்திலும் வள்ளுவர் வலியுறுத்துகின்றார்:
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் 
பெற்றத்தால் பெற்ற பயன்(குறள் 524) (பொருள்: சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.)

தான்
தன்னைப் போற்றிக் காத்தலும் இன்றியமையாதது என்றது தான் இன்றி பிறர்க்குச் செய்யவேண்டிய அறங்களைச் செய்தல் இயலாது என்பதனால். சுவரின்றிச் சித்திரம் வரையமுடியாது. ஆதலால், பிறருக்குத் தொண்டு செய்பவன் தன்னையும் பேணிக் கொள்ளல் வேண்டும். தன்னைப் போற்றுதலைக் குற்றம் என்போரும் உளர். ஆனால், வள்ளுவர் வெளிப்படையாகவே உன்னையும் போற்றிக் காத்துக் கொள் என உலகறிய உரைக்கின்றார். 
குடும்பத்தலைவன் இல்வாழ்க்கையின் ஆக்க நிலையில் அமைந்த உறுப்பு. ஆதலால் அவனும் காலத்தில் உணவு அளவாக உண்ணுதல், உடல்நலத்திற்குரிய பயிற்சிகளை மேற்கொள்ளல், நல்ல நூல்களைக் கற்றல், அன்பு நலத்தை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவை வழி தன்னைப் பேணிக்கொள்ளுதல் வேண்டும்.
'எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று' என்று பரிமேலழகர் தன்னை ஓம்புதலும் அறச்செயலே என்பதற்கு விளக்கம் தந்தார்.

ஐம்புலத்து ஆறு என்றால் என்ன?

ஐம்புலத்து ஆறு என்ற தொடர்க்கு 'ஐந்திடமாகிய நெறி' என மணக்குடவரும் 'ஐந்து கூற்று நெறி' எனக் காலிங்கரும் 'ஐந்திடத்தும் செய்யும் நெறி' எனப் பரிமேலழகரும் உரை கூறுவர். 'ஐந்து வகையாரிடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களை' என்றனர் கா சுப்பிரமணியபிள்ளையும்., சொ தண்டபாணியும்.. ஐந்திடத்திலும் அறநெறியை என்பது திரு வி க., குழந்தை ஆகியோர் உரை. 'ஐந்திடத்தும் செய்யப்படும் அறநெறி' என்பது பொருத்தமாகும்.

தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்து இடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் தலையாய கடமையாம் என்பது இக்குறட்கருத்து.







தென்புலத்தார் தெய்வ வழிபாடு 

                   - முனைவர் ந. இரா. சென்னியப்பனார்                                                                       http://www.saivasiddhanta.in/view_article.php?page=59 

துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு
இறப்பன் இறந்தால் இருவிசும்பு ஏறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கோலோ என்று என்னுள்ளம் கிடந்து மறுகிடுமே.
                                                       - திருநாவுக்கரசர்

மக்கள் வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டும் இயல்பானவை. இறத்தல் என்பது பருவுடம்பிலிருந்து உயிர் பிரிவது. உடம்பு வேறு உயிர் வேறு என்பது தமிழர் கொள்கை.

“காலம் உலகம் உயிரே உடம்பே” என்ற தொல்காப்பிய நூற்பாவால் உயிர்வேறு உடம்பு வேறு என்பது தெரிகிறது. “சென்ற உயிரின் நின்றயாக்கை” என்று தொல்காப்பியர் குறிப்பிடுவதால் உடம்பிலிருந்து உயிர் பிரியும் என்பது தெரியவருகிறது. உடம்பை விட்டு உயிர் நீங்குவதை.

“குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே
 உடம்போடு உயிரிடை நட்பு”
என்று திருவள்ளுவரும் குறிப்பிட்டுள்ளார்.

இறப்பு என்பது நியதி தத்துவப்படி அவரவர்க்குரிய வாழ்நாளில் வரையரை அடிப்படையில் அமைந்தது.

“பேரிழவு இன்பமொடு பிணி மூப்புச் சாக்காடு
 என்னும் ஆறும் முங்கருவுள் பட்டது”
 (சிவஞான சித்தியார்)

என்பதனால் தாய்வயிற்றின் கருவில் இருக்கும் போதே இறப்பின் நிலை வரையரை செய்யப்படுகிறது.

இறந்தவர்க்குப் பலவித சடங்குகள் செய்தல், சாப்பறை கொட்டுதல், மகளிர் மார்பில் அடித்துக் கொள்ளுதல், பிண்டம் வைத்தல் முதலிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.

உயிர் நீத்த உடலை முதுமக்கள் தாழியில் இட்டுச் சமாதி செய்து வழிபாடு செய்வது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே நடைபெற்று வந்துள்ளது. சங்க காலத்திலேயே சுடுதல், புதைத்தல் என்ற இரண்டும் வழக்கில் இருந்துள்ளன.

“சுடுவோர் இடுவோர் தொடுகுழி படுப்போர்
தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்”

என்று மணிமேகலை இறந்தோருடலை அடக்கம் செய்யும் முறையைக் கூறுகிறது.

உடம்பை விட்டுப் பிரிந்த உயிர் நுண்ணுடம்புடன் மேலே செல்லும். செய்த வினைக்கேற்பத் தீமையை நரகத்திலும் நன்மையைச் சொர்க்கத்திலும் அனுபவிக்கும்.

பின்னர் மேகத்தில் இருந்து வரும் மழைத்துளி வழியே நிலவுலகு வந்து பயிர் பச்சைகளில், தானியம் காய்கறிகளில் தங்கித் தந்தை வயிற்றில் இரண்டு மாதம் இருக்கும். கணவன் மனைவி உடலுறவின்போது ஆண் விந்துவாகப் (சுக்கிலம்) பெண்ணின் கருப்பையில் உள்ள பெண் கருமுட்டை (சுரோணிதம்) யில் கலக்கும். கலந்து கருவாகிக் குழந்தையாய்ப் பிறக்கும். சைவத்திருமுறைகளும் சாத்திரங்களும் இவற்றை விரிவாகக் குறிப்பிடுகின்றன.

இறப்பதைப் பற்றி பலவிதமான தவறான கருத்துக்கள் பரவியுள்ளன. இறந்தவர்களுக்கு வழிபாடு செய்வதுதான் அவர்கள் மக்கள் செய்யவேண்டிய சிறந்த கடமையாகும். துறவறத்தாராக இருந்தால் அவர்கள் இறைவன் அடி அடைந்த நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் வழிபாடு செய்ய வேண்டும். சித்திரைச் சதயம் திருநாவுக்கரசர் வைகாசி மூலம் திருஞானசம்பந்தர், ஆனி மகம் மாணிக்கவாசகர், ஆடி சுவாதி நம்பியாரூரர் முதலியன அவ்வாறமைந்த குருபூசை வழிபாடாகும். இல்லறத்தாராக இருந்தால் அவர்கள் காலமான திதியில் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் இறந்த மாதத்தில் வருகின்ற வளர்பிறை, தேய்பிறை திதியில் வழிபாடு செய்ய வேண்டும்.

முதல் திதி வழிபாடு காலமான பதினாறாம் நாள் செய்ய வேண்டும், பதினாறாம் நாள் அதே திதிவரும். தற்காலத்தில் இறந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வீடு அடைத்தல் முதலியன செய்யப்படுகின்றது.

இறந்தால் வீடு மூட வேண்டிய நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி 6மீ, ரோகிணி 4மீ, கார்த்திகை, உத்திரம் 3மீ, மிருகசீரிடம், சித்திரை, புணர்பூசம், விசாகம், உத்திராடம் 2மீ என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு அதற்கு பரிகாரங்களும் விரிவாக சொல்லப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், திருமுறைகள், புராணங்கள், கல்வெட்டுக்கள் முதலியவற்றில் வீடு அடைக்கும் நிகழ்ச்சி எங்கும் குறிப்பிடப்படவில்லை.

திருநாளைப் போவார், ஏயர்கோன் கலிக்காமர் ரேவதி, புகழ்ச்சோழர் கார்த்திகை, சண்டேசுவரர் உத்திரம், மங்கையர்க்கரசியார் ரோகிணி, திருநாவுக்கரசர் சதயம், இசைஞானியார் திருக்குறிப்புத் தொண்டர் சித்திரை, குமரகுருபரர் விசாகம், உமாபதி சிவாச்சாரியார் அவிட்டம், கச்சியப்பமுனிவர் புனர்பூசம் முதலியோர் குருபூசை அடைக்க வேண்டிய நட்சத்திரங்களில் வருகின்றன. அவர்கள் வரலாறு கூறும் நூல்களில் எங்கும் அடைக்கப்பட்ட செய்தி குறிக்கப்படவில்லை.

இன்று பெரிய மருத்துவமனைகளில் பலர் இறக்கின்றார்கள். அடைக்கும் நட்சத்திரக் கணக்குப்படி அங்கு அடைக்க இயலுமா?

சென்னை, மும்பை, டில்லி முதலிய நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் வாழ்கின்றனர். அடைக்கும் நட்சத்திரத்தில் இறந்தால் அங்கு அடைத்துவிட்டு எங்கே செல்வது?
விபத்துக்களில் பலர் அடக்க வேண்டிய நட்சத்திரத்தில் இறக்கின்றனர், எங்கே அடைப்பது?

இறந்தவர் படத்தை வீட்டில் வைத்து காலை, மாலை வழிபாடு செய்தால் இறந்த உயிர் வந்து பார்த்து மகிழும். இறையருளும் கிட்டும். அடைத்து வைத்துவிட்டால் இருட்டு மிகும். எலி, பெருச்சாளி முதலியவை குடியேறும். எனவே அடைப்பது எந்தவிதத்திலும், விஞ்ஞான முறைப்படியும், மெய்ஞ்ஞான முறைப்படியும் தவறாகும். விளக்கேற்றி வழிபாடு செய்வதே மிகச்சிறந்தது.

No comments:

Post a Comment