Sunday, May 21, 2023

வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - திருவள்ளுவர் கூறுவது என்ன?

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்

தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50: இல்வாழ்க்கை.
நீதிநூல்கள் காட்டும் வழியில் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் அதில் வழிகாட்டி பூமியில் நெறியோடு வாழ்பவன் - அவனோடு வாழும் மக்களால் வானுலகில் வாழும் தேவர்களுக்கு சமமாக போற்றப்படுவான்.

"வைக்கப்படும்" என்ற இதே வழியில் மேலும் மூன்று குறட்பாக்கள் உள்ளது

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் - குறள் 214: ஒப்புரவறிதல்.
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்;  உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் - குறள் 388: இறைமாட்சி.
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் அரசனை  மக்களைக் காக்கும் தெய்வம் என அவர் குடிமக்கள் போற்றுவர்

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் - குறள் 850: புல்லறிவாண்மை.
இருக்கிறது என்று நீதி நூல் வழி வாழும் உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், உடன் இருப்பவர்களால் இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

நம் மேலே பார்த்த நான்கு குறட்பாக்களிலும் உடன் வாழும் மக்கள் அவரை செத்தாருள்,   றை, பேய் எனக் கருதுவர், என்பது போலே வாழ்வாங்கு வாழ்பவர் நிலையும், அவர் தெய்வம் ஆகிவிட்டாதாக் வள்ளுவர் கூறினார் என்பது திருவள்ளுவர் உள்ளத்தின் வழி அல்ல, தவறான (உங்கள்) கருத்து வள்ளுவம் மீது திணிக்கப் படுகிறது.


No comments:

Post a Comment