Sunday, May 10, 2020

வள்ளுவர் உள்ளத்தை சிதைக்கும் நவீன உரைகள் -குறள் 822

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். குறள் 822: கூடாநட்பு

இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, ஒரே சிந்தனையில் நில்லாது மாறும் மகளிரின் மனம்போல வேறுபட்டு நிற்கும்.

வள்ளுவர் உள்ளத்தை சிதைக்கும் நவீன உரைகள்

20ம் நூற்றாண்டின் பெரும்பாலான உரைகள் திருவள்ளுவர் பெண்ணின் மனம் ஒரு பொருளில் நிலையாக இருக்காது என்பது அவர்கள் தாங்களைப் போலே வள்ளுவருக்கும் முற்போக்கு வேடமிட உரைகள் போனவிதம் - கருணாந்தி உரை கொடூரம்

மு. வரதராசன் உரை: இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம்போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.

மு. கருணாநிதி உரை:உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.

 பண்டைய உரைகள் எல்லாம் சரியாக உள்ளது, இன்றைய நவீனர்கள் முற்போக்கு வேடதாரிகள்; வள்ளுவர் சொன்னதை விட்டு சொல்லாததை கூறி பொருளையும் சிதைக்கின்றனர்
மணக்குடவர் உரை:
நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது

பரிமேலழகர் உரை:
இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்' (வளையாபதி புறத்திரட்டு-பேதைமை,18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.).

No comments:

Post a Comment