Sunday, May 10, 2020

திருக்குறள் உரைகள்- முதல் தவறு எனில் எல்லாமே தவறு குறள் 813

திருக்குறள் உரைகள்- முதல் தவறு எனில் எல்லாமே குறள் 813


உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.                       குறள் 813 : தீ நட்பு

தன்னுடைய சுய லாபம் பார்த்து நட்பு கொள்வோரும், நம்மிடம் கிடைப்பதை எடுக்க நட்பு கொள்வாரும் திருடர்களும் மூவருமே சமமே, தவிர்க்க வேண்டிய தீய நட்பே


மணக்குடவர் உரை: நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்தூக்கும் நட்டோரும், பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள்

"பெறுவது கொள்வார்" என்பதை மணக்குடவர் கணிகையர் என்றிட பரிமேலழகர், பரிதியார் இருவருமே இதை பரத்தை - என்று பொருள் கொண்டனர்.

20ம் நூற்றாண்டின் நவீன உரைகளுமே அதே முறையிலே அமைந்துள்ளது
 ஒப்பார்.
காளிங்கர் சரியான உரையைக் கூட நவீன உரையாசிரியர்கள் கவனிக்காமல் தொடர்ந்து அவர்களும் தவறாகவே உரை செல்கிறது.

திருவள்ளுவர் சொன்னதைவிட்டு சொல்லாததை முதல் உரையாசிரியர் போட - பெரும்பாலான நவீன உரை வரை அதே நடைமுறை காண்கிறோம்

No comments:

Post a Comment