கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2:கடவுள் வாழ்த்து
முழுமையான அறிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
உலகு என வள்ளுவர் தொடங்குவது- பெரிய புராணம் "உலகெல்லாம் உணர்ந்து" எனவும் கம்ப இராமாயணம் "உலகம் யாவையும் எனத் தொடக்கம்" போலவே தான்.
இந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிப் பெருங்கடல் கடக்க இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் முடியாது என்கிறார்.
மனிதனின் அறிவு எதற்கு??
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்
மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி குறள் 356: மெய்யுணர்தல்
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். குறள் 140: ஒழுக்கமுடைமை
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். குறள் 850: புல்லறிவாண்மை
இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்
திருவள்ளுவர் தான் கூறவேண்டிய அறத்தை, பொருளை விளக்க இரண்டு உத்தியைப் பரவலாக கையாள்வார்- அது முன்னோர் நூல் மேல் ஏற்றியும், உலகின் மேலிட்டு உரைப்பது - இதன் பொருள் என்ன எனில் வள்ளுவர் தனக்கு முன்பாக வாழ்ந்த மெய் ஞான மரபை அப்படியே வழி மொழிகிறார் எனப் பொருள்
திருக்குறளுக்கு உரை காணுதல், ஆய்வு செய்ய வேண்டிய முறை
தமிழின் மிகத் தொன்மையான் இலக்கியங்கள் பத்துப் பாட்டு- எட்டுத் தொகை எனும் சங்க இலக்கியங்கள்; இவை பெருமளவில் பொமு200 பொமு௭00 இடையே இயற்றப் பட்டும்; பின்னர் 9ம் நூற்றாண்டு இறுதியில் கடவுள் வாழ்த்து இணைத்தும் சிலபல பாடல்கள் சேர்த்து தொகுக்கப்பட்டது.தொல்காப்பியம் 8ம் நூற்றாண்டிலும், திருக்குறள் அதற்கு அடுத்த பொஆ நூற்றாண்டில் எழுந்தது ஆகும், முதல் உரை தமிழ் சமணர் மணக்குடவருடையது, இவரை ஒட்டியே பெரும்பாலன உரைகள் எழுந்தன.
இரட்டைக் காப்பியங்கள் எனும் சிலப்பதிகாரம்- மணிமேகலை குறளிற்கு பின்பானது.
வள்ளுவத்தில் உள்ள குறளை ஆய்வு செய்வோர், அந்த அதிகாரம் மற்றும் வள்ளுவம் மொத்த அமைப்பினோடே பொருத்தி காணவேண்டும். அதே நேரத்தில் சங்க இலக்கியம் முதலாய் இரட்டை காப்பியம் வரையாக பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் எந்த ஒரு சொல்லைப்
போட்டபோது போட்டிருப்பார், எனவே வலிந்து வள்ளுவர் பயன்படுத்திய சொற்களை ஆய்வு -உரை செய்ய பயன்படும் உத்திகள் பன்னாட்டு/பல்கலைக் கழக அறிஞர் இடையே எடுபடாது
மொழி வெறி -இனவாதம் வள்ளுவர் ஏற்காதது.
திருவள்ளுவர் தன் முதல் குறளில் ஆதி பகவன் என வடசொல்லை பயன்படுத்தியவர்; மேலும் 1330 குறளில் எங்கும் தமிழ் என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தவில்லை.பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு. நாடு குறள் 735:
செங்கோன்மையில் அரசனின் செங்கோல் அந்தணர் வேதங்கள் -தர்மசாஸ்திரங்களிற்கு அடிப்படையாய் இருக்க வேண்டும் எனவும், மோசமான ஆட்சியில் அந்தணர் வேதம் மறப்பர் எனவும் கூறுவதால் வள்ளுவர் பாரத தத்துவ ஞானமரபின் வேர்களான வேத மரபைப் போற்றுபவர் எனத் தெளிவாக்குவார் -- இந்த நடைமுறை நாம் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சி எனவும் அறியலாம்.
வள்ளுவர் அறத்துப் பாலில் பாயிரம் என நான்கு அதிகாரம்; இதில் முதலாவது கடவுள் வாழ்த்து, பின் வான் சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல் என அமைத்திருப்பார். இந்த அமைப்பினை வள்ளுவர் தமிழ் மெய்யியல் மரபில் வான் சிறப்பை கருதல் அளவை எனவும் அமைந்துள்ளது.
வள்ளுவர் தன் நோக்கமே மனிதன் வாழ்வின் ஒவ்வொருசெயலிலும் அறம் என்றிடவே பாயிர முடிவில் அறன் வலியுறுத்தல் என அதிகாரம் வைத்தார்.
திருவள்ளுவரும் வர்ணமும், ஜாதியும்
தனி மனித வாழ்வில் நட்பு மிக முக்கியம், நண்பரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: நட்பாராய்தல்
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794: நட்பாராய்தல்
அரசர் தன் நிர்வாகப் பணிக்காய், தூதராய் சரியானவரை தேர்ந்தெடுக்க வள்ளுவர் கூறும் அறிவுரை
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. தெரிந்துதெளிதல் குறள் 502:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் 681: தூது
தொல்காப்பியம் பிறப்பே குடிமை, ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன என்ற அதே நடைமுறையை தான் வள்ளுவர் கூறுகிறார். உயர்ந்த குடி பிறந்தவரிடம் மட்டுமே நற்பண்பு இருக்கும் எனவும் பல குறட்பாக்கள் உள்ளன.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. குறள் 124: அடக்கமுடைமை
மணக்குடவர் உரை: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.
மு.வரதராசனார் உரை: தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். குறள் 133: ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.
மு.வரதராசனார் உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. குறள் 449: பெரியாரைத் துணைக்கோடல்
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். குறள் 463: தெரிந்துசெயல்வகை
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். குறள் 120: நடுவு நிலைமை
ஷத்திரிய பற்றியதானது
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். குறள் 550: செங்கோன்மை
மு.வ உரை:கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528: சுற்றந்தழால்
மு.வரதராசனார் உரை: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். குறள் 582: ஒற்றாடல்
மு.வரதராசனார் உரை: எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
சாலமன் பாப்பையா உரை: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். குறள் 674: வினைசெயல்வகை
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
மு.வரதராசனார் உரை: செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை: செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். குறள் 880: பகைத்திறந்தெரிதல்
மு.வ உரை:பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது குறள் 1075: கயமை
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். குறள் 1076:கயமை
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். குறள் 1078:கயமை
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். குறள் 1079 கயமை
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 992 பண்புடைமை
No comments:
Post a Comment