நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 452
‘தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை’. { குறள் 964}
திருவள்ளுவர் கூறுவதை மனதில் ஏற்று இகல் இன்றி பொருள் கூறுங்கள் பிறகு சமுதாய நிலையில் அன்றைய நிலையையும் யோசித்துப் பாருங்கள்.
கல்வி அனைவரையும் சமன் செய்யும் கருவி தான் ஆனால் கல்வி என்பது அடிப்படை கல்வி உலகில் பரவலாக அனைத்து பிரிவினருக்கும் கொடுத்து பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை திண்ணை கல்வி மூலம் கொடுத்துவந்த ஒரே சமுதாயம் இந்தியா மட்டுமே தான் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை
குறள் 409:
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனந்தூய்மை தூவா வரும்
இனத்துள தாகும் அறிவு.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
குலத்தின்கண் ஐயப் படும்.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
குன்றுவ செய்தல் இலர்.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு- மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்.
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு- மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்.
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவல்ல
நட்டாலும நண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.-----------------------------(மூதுரை- 4)
நட்டாலும நண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.-----------------------------(மூதுரை- 4)
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்- ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்- ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. குறள் 964: மானம்
சாலமன் பாப்பையா உரை:நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். குறள் 952: குடிமை
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. குறள் 957:
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். குறள் 958: குடிமை
உயர்கல்வி என்பது தக்ககுரு பரம்பரையாக அதாவது குருவினுன் வீட்டோடு தங்கி பல ஆண்டுகாலம் படிக்க வேண்டும் என்பதுதான் 17ம் நூற்றாண்டு வரை உலகம் முழுக்க இருந்த நிலை எனவே கல்வி கிட்டத்தட்ட பரம்பரை என்ற நிலை வந்தது அதனால் சமுதாயத்தில் வர்ணப் பிரிவுகள் பிறப்பின் என்ற நிலை ஏற்பட்டது இது சமுதாயத்தில் ஏற்பட்ட நிலையை அதை அதை உறுதிசெய்ய இடை சாதிகளுக்கு மிகவும் வசதியான வர்ணாசிரமம் என்பது கடவுள் கொடுப்பது என்பது ஆனால் நீங்கள் கொடுத்த பாடல்
அதாவது பிராமணன் முகத்தில் என்று தோன்றினான் என்றால் அவன் மூளையை பயன்படுத்துகிறான் என அர்த்தம் அதே போல என் தோளிலிருந்து பிறந்தான் என்றால் அவன் தோள் வழியே பயன்படுத்துகிறான் என்ற ஒரு உவமை வெளிப்பாடே தவிர அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை காலில் இருந்து பிறந்தவன் என்பது இழிவு எனில் காலின்றி மனிதன் இருக்க இயலுமா இந்த அளவு கூட சிந்திக்காமல், தமிழரின் பணடை தொல்குடி அந்தணரை ஒவ்வொரு பதிவிலும் இனவெறியால் தாக்குவது தேவையற்ற அறிவற்ற மூடத்தனமான செயல்
வைசிய- வாணிகர்/உழவர் பற்றியதானது
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. குறள் 449: பெரியாரைத் துணைக்கோடல்
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். குறள் 463: தெரிந்துசெயல்வகை
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். குறள் 120: நடுவு நிலைமை
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. குறள் 1075:
மு.வரதராசனார் உரை:
கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.
குறள் 1074:
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
மு.வரதராசனார் உரை:
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்
No comments:
Post a Comment