Friday, April 24, 2020

பார்ப்பான் பிறப்பு ஒழுக்கங் குன்றக் கெடும்.

பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்   குறள் 134: ஒழுக்கமுடைமை

இதற்கு பொதுவான பொருள்:
“பார்ப்பான்” தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் மீண்டும் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான் என்பதாகும்.


ள்ளுவர் பார்ப்பான் ஓத்து என்கையில் அது மெய்யியல் மரபின் வேரான வேதங்களைக் குறிக்கும், மேலும் இரண்டு குறட்பாக்களில் இதே முறையில் வள்ளுவர் பிராமணர்களையும் வேதங்களையும் தொடர்பு படுத்தியே குறள் தந்துள்ளார்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
ஆட்சி செய்யும் அரசனின்  செங்கோல் அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களிற்கு அடிப்படையாய்  இருக்கவேண்டும்.

 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர். 

திருவள்ளுவர் - இந்தக் குறட்பா தவிரவும் அந்தணர் எனும் சொல் மேலும் இரண்டு குறட்பாவிலும், வேதங்களைப் பற்றி சில குறட்பாவையும் காண்போம்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.                  (28-நீத்தார் பெருமை)
தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - குறள் 3:1


இக்குறளினை விரிவாகக் காணுமுன் தமிழர் மெய்யியல் மரபில் தொல்குடி பார்ப்பனர்- அந்தணர் பற்றி தமிழின் மிகத் தொன்மையான சங்க இலக்கியங்களில் பார்ப்போம்

 படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 
எழுதாக் கற்பினின் சொலுள்ளும்   குறுந்தொகை 156. 5-6

தமிழர் சமயத்தின் ஆதி நூல் வேதங்கள், அவை ஏட்டில் எழுதாமல் குருவிடம் கேட்டு அறிதல் முறையிலே தான் கற்க இயலும், எழுதாமையால் அது மறை எனப் படும், ஒத்து கூறி ஓதுவதால் ஓத்து எனப் படும்.
 வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை.  அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது




ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். 
குறள் 133:
மு. வரதராசன் உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.





ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21.
உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான (தொல்காப்பியம் 3-33)
திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.

  3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)
வேதங்களை வள்ளுவர் குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள்

த்விஜந்மந்(dvijanman) என்பது ஒரு வடமொழி சொல்.
இதற்கு இரு-பிறப்பாலான் (Twice born, regenerate) என்று பொருள்அதாவது எவனொருவன் இம்மண்ணில் பிறந்த தன்னையே மீண்டும் பிறப்பித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவனோ அவனே “பார்ப்பான்” என்னும் “ப்ரஹ்மனன்” ஆவான்.
இத்தகைய ஆற்றல், ஒருவனுக்கு சத்குருவின் மூலமாக மட்டுமே கிடைக்ககூடிய ஒன்று. இத்தத்கைய தகுதியில் ஒருவன் பார்ப்பான் ஆகின், பின் அக்குருகுலத்தில் தான் பயின்ற கல்விதனை மறக்கும் சூழ்நிலை ஏற்படினும், ஒத்துக்கொள்ளலாம். ஆனால், அவன் பிறந்த(தோன்றிய)அக்குருகுலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால், அக்குலத்தின் தீராத சாபத்திற்குள்ளாகி மாறாத அழிவை நோக்கியே செல்வான் என்று வள்ளுவர் நமக்கு எச்சரிக்கிறார்.



அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  நின்றது மன்னவன் கோல் - குறள் 55:3

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.

ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
  காவலன் காவான் எனின் - குறள் 56:10

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
 பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - குறள் 3:1
ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்ட முனிவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே வேத நூல்களின் துணிவாகும்.
நற்பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பல கொல்
யாபல கொல்லோ பெரும!”
(புறம் 15)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
  மறைமொழி காட்டிவிடும் - குறள் 3:8
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.                  (28-நீத்தார் பெருமை)


தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
  நல் ஆற்றின் நின்ற துணை - குறள் 5:1

அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
  பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை - குறள் 4:7
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
  போஒய் பெறுவது எவன் - குறள் 5:6

புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
  அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3


நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
  உண்மை அறிவே மிகும் - குறள் 38:3
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
  பண்பு உடையாளர் தொடர்பு - குறள் 79:3

No comments:

Post a Comment