Sunday, December 9, 2018

திருவள்ளுவர் போற்றும் முந்தைய நூல்கள்

திருவள்ளுவர் போற்றும் முந்தைய நூல்கள் - வேத தர்ம சாஸ்திரங்களே


1. ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்

  காவலன் காவான் எனின் -                 குறள் 56:10



2. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்

  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை             - குறள் 322  கொல்லாமை
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
மணக்குடவர் உரை: பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல்நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.



3. விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
  கற்றாரொடு ஏனையவர்                        - குறள் 410 கல்லாமை
அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

4. நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்

  உண்மை அறிவே மிகும்                           -  குறள் 373  ஊழ்                                                                                                        
 ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.


5. நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு                   - குறள் 69:3 தூது
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

6. பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
  அஞ்சுமவன் கற்ற நூல்                     - குறள் 727 அவையஞ்சாமை
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.

7. உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
  அமைவு அரண் என்று உரைக்கும் நூல்                - குறள் 743 அரண்
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

8. நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
  பண்பு உடையாளர் தொடர்பு                              - குறள் 783 நட்பு
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

9. நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு                            - குறள் 683  தூது
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

10. ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
  தெற்று என்க மன்னவன் கண்                          குறள் 581  ஒற்றாடல்

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.
மணக்குடவர் உரை: ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக.
அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.
11.மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
  யா உள முன் நிற்பவை                          - குறள் 636 அமைச்சு
இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.
மணக்குடவர் உரை: மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள? இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.
12. வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
  நுண் அவை அஞ்சுபவர்க்கு                       - குறள் 726 அவையஞ்சாமை
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?.
13. அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய

  நூல் இன்றி கோட்டி கொளல்                            குறள் எண்:401 கல்லாமை

அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல்சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.


14.மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்

  வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1  மருந்து

மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.


15.பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
  எபால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3  பொச்சாவாமை



மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.



No comments:

Post a Comment