Tuesday, June 19, 2018

தமிழ் எழுத்தின் வளர்ச்சியும் தொல்காப்பியமும்

தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியின்படி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.
பெர்கிலியின் கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் திரு.ஜியார்ஜ் ஹார்டு மற்றும் இஸ்ரேலின் ஜெருசலேம் ஹீப்ரு பல்கலை கழக பேராசிரியர் திரு.டேவிட் ஷுல்மன்; இருவரும் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள்; இருவருமே சங்க இலக்கியம் முதல் இன்றுவரை தமிழ் இலக்கியம சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு பெற்றும் கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளது, தொல்காப்பியம் சமஸ்கிருத இலக்கணத்தை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளது என்பர்



தமிழ் மெய் எழுத்துகளிலும், பின்னர் உயிர் மெய்யிலும் சிறப்பு எழுத்துக்கள் "ள" "ற" "ன"; இவை வட மொழியில் கிடையாது, எனவே தான் தமிழுக்கே தனியாய் இவை பீனர் உருவாகியவை ஆதலால் கடைசி எழுத்துக்களாய் சேர்த்தார் தொல்காப்பியர் என பல அறிஞர்கள் கூறியதை பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.
தமிழ் உணர்வாளர்களால் தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்திலிருந்து தான் உரு பெற்றது என்பதை ஏற்க இயலாமல் போக, கே.பி.அறவாணன் ஒரு போலி ஆய்வு கட்டுரை படித்தார், ஆனால் ஆய்வுலகம் ஏற்கவில்லை என்கிறார் பேராசிரியர்.
(வடமொழி என்கையில் சமஸ்கிருதம் என்பதைவிட அதன் பேச்சு வழக்கு மொழியான ப்ராகிர்தத்தையே குறிக்கும்)
















































No comments:

Post a Comment