Saturday, June 23, 2018

திருக்குறளை இழிவு செய்யும் தமிழ் பகை(புல)வர்கள் - 1.இலக்குவனார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை             (அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43)
இறந்த முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்

இறந்த முன்னோர்களுக்கு கடன் செய்தல் நமது சமயத்தின்ன் மிக முக்கியமானது.
  

தமிழர் பாரம்பரியத்தில் - கடவுள் வழிபாட்டில் நம்பிக்கையில்லாதோர் திருக்குறளை ஏற்காமல் வீசலாம்,  திருவள்ளுவர் ஆஸ்திகர், ஆனால் நல்ல கல்விப் புலமை உள்ள தமிழறிஞர்கள் குறளிற்கு பைத்தியக்காரத்தனமாய் உரை சொல்லுதல் சிறந்த உதாரணம். 

சி. இலக்குவனார் 



 மணக்குடவர் உரை:
பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முன்னோர்கள், தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்ற ஐந்திடத்தும் செய்யவேண்டிய நல்வழியினைப் போற்றிக் காத்து வழுவாமல் நடந்துகொள்ளுதல் சிறப்புடைய அறமாகும்.

தெய்வத் தமிழ் மரபை இழிவு செய்யும்   சி. இலக்குவனார்  தமிழ் பகைவரே


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43
மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.
தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.
பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
(பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)
இரா சாரங்கபாணி உரை: இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம்.




இந்துக்கள் தினமும் பஞ்சயக்ஞம் செய்யவேண்டும் என்பதை வள்ளுவன் இரண்டே வரிகளில் சொல்லும் குறள் இது. ஆறாவது பகுதி தானியத்தை மன்னனுக்கு வரியாகச் செலுத்தவேண்டும்.
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர் பெறா அதீரும் (புறம்-9)
என்று சொல்லி நெட்டிமையார் என்னும் புலவரும் ஆரிய திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுப்பார். இறந்தோருக்கு திதி, தர்ப்பணம் செய்வதை அழகாக எடுத்துரைக்கிறார் புறநானூற்றுப் புலவர்.
தென்புலத்தார் [[முன்னோர்கள் /பித்ருகள் ] ]வழிபாடு : மாஹளைய அமாவாசை :23-9-14........
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை - குறள்....
இறந்து தென்திசையில் வாழ்பவர்களாகிய முன்னோர்கள்[தென்புலத்தார்/பித்ருகள் ] ,தெய்வம், விருந்தினர்கள் , சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது இல்லறத்தானின் தலையாய கடமைகளாகும்.வள்ளுவர் இல்லறத்தானுக்குரிய ஐந்து கடமைகளை சொல்லும்போது முதலில் தென்புலத்தார் எனும் பிதுர்கடன், தெய்வகடன்,முன் அறிமுகம் இல்லாத விருந்தினர் கடன் ,உறவினர் கடன் , குடும்பஸ்தனாக மனைவி மக்கள் கடன் ,என்று சொல்லி அதில் பிதுர்களுக்கு செய்ய வேண்டிய ஆற்ற வேண்டிய காரியங்களை முதலில் சொல்வதிலிருந்தே இதன் முக்கியத்துவம் தெரிகிறது .ஏன் கடமை என்று சொல்லாமல் கடன் என்று சொல்கிறோம் கடமை தவறினால் கூட பரவாயில்லை .ஆனால் பட்ட கடனை அடைக்க வேண்டும் ஒவ்வொரு வருக்கும் நாம் இதை செய்ய கடன்பட்டிருக் கிறோம்.புத்திரன் என்ற சொல்லுக்கு பிதுர்க்கடன் ஆற்றுபவன் என்று பொருள் .
பெற்றோர்களுடன் வாழ்ந்த காலத்தில் அவர்களைச் சீராக கவனிக்காதவர்கள்கூட, அவர்கள் இந்த உலகைவிட்டு மறைந்தபின் மிகுந்த பக்தியுடன் பிதுர்பூஜை செய்து வழிபட்டு மனதில் உள்ள உறுத்தலையும் அச்சத்தையும் போக்கிக் கொள்கிறார்கள்.முன்னோர்கள் தெய்வமாக நம்முடன் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.நம் முன்னோர்கள் இறந்த உடன் அந்த ஆன்மா அதன் வினைக்கேற்ப முக்தியோ மறுபிறப்போ நரகமோ சொர்க்கமோ உடனே கிடைக்காது அப்போது இறைவனால் மறைத்தல் தொழில் நடக்கும் ஒய்வு அளிக்கிறார் எனவே அது வரை அந்த உயிர் (ஆன்மா) சூக்கும உடலோடு அலையும் . அதாவது சூக்கும தேகம் என்பது கனவில் நம் உடலை காண்கிறோமே அது தான் அந்த உடலால் எந்த கிரியையும் செய்ய இயலாது அல்லவா ?அப்போது அதற்கு உணவு என்று எதுவும் வழங்கப்படாது .அந்த உலகத்திற்கு பிதுர் லோகம் என்று பெயர் . அவர்களுக்கு நாம் இந்த பூமியில் செய்யும் காரியங்களே படையல்களே அவர்களுக்கு திருப்தி தரும் உணவாகும் .அவை பிதுர் தேவதைகள்[சூரியன் ] மூலம் அவர்களை சென்றடையும் அப்போது அவர்கள் மகிழ்ந்து ஆசிர்வதிக்க நம் சந்ததி தழைக்கும் . 21 தலைமுறை முன்னோர்கள் இந்த பிதுர்கள் என்ற பெயரில் அடங்குவார்கள் . "மூவேழ் சுற்றம்[21 தலைமுறை முன்னோர்கள் ] முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி" என்று மணிவாசக சுவாமிகள் அருளியுள்ளார் .இதன் பொருள் பிதுர்களால் வரும் நரக வேதனை இல்லாமல் அருள் புரியும் என்பதாகும்.இந்த பிதுர்கடனால் வரும் பாதிப்புகள் ஒருவருக்கு குறித்த காலத்தில் எந்த நல்ல விசயங்களும் நடக்காமல் தள்ளி போகும் . அதாவது திருமணம் நடக்காது நடந்தால் தாரத்தால் நிம்மதி இருக்காது .தாரம் அமைந்தால் தொழில் அடிபடும் தொழில் இருந்தால் மக்கட்பேறு கிடைக்காது அப்படி குழந்தை இருந்தால் ஊனமாக பிறக்கும் கல்வி சிறக்காது அந்த பிள்ளையால் அவமானங்கள் நேரும், கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகும் திருமணம் காதலாகவோ கலப்புமணமாகவோ இருக்கும்,வீண் பழி,அவமானம்,கடன், கஷ்டம் விவாகரத்து,அகால மரணம் ,தெய்வ நிந்தனை செய்வது,வறுமை என்று திரும்பிய திசையில் எல்லாம் பிரச்சினை என நிம்மதியில்லாமல் இருக்கும் இது ஆண் பெண் என பாகுபாடு இல்லாமல் இருபாலர்க்கும் பொருந்தும்.பிதுர் தோஷம் ஒருவருக்கு உள்ளது என்பது அவர்களின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 3,5,7,9,11 ஆகிய இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் அவர்கள் பிதுர்தோஷம் உள்ளவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம் .இராகு தந்தை வழியையும் கேது தாய் வழியையும் குறிக்கும் .இதற்கு ஒவ்வொரு அமாவாசையிலும் குறிப்பாக ஆடி,புரட்டாசி, தை அமாவாசையும் பிதுர்கடன் தர்ப்பணம் ஆற்ற உகந்த நாட்கள் ஆகும் .பிதுர் தோசம் போக்க பவானி கூடுதுறை, திருவையாறு, கொடுமுடி, மயிலாடுதுறை ,திலதர்பணபுரி,திருபூவணம்[மதுரை], திருவெண்காடு ருத்திர பாதம்,திருமறைகாடு ,கன்னியாகுமரி ,அவினாசி ,சென்னை மயிலாப்பூர் முதலிய சிவாலயங்களில் வழிபட்டு ,21 நல்எண்ணெய் அகல் தீபம் ஏற்றி ,கருவறை தீபத்தில் நெய் சேர்த்து ,எள் சாதம் தானமிட்டு,கால பைரவர் சன்னதியில் பஞ்ச தீப எண்ணெய் விட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து , அருகில் உள்ள ஆலய தீர்த்த நீர்நிலைகள் உள்ள இடங்களில் பிண்டம் செய்து வைத்து வேண்டி நிவர்த்தி செய்யலாம் .உடனே தங்கள் பிதுர்கள் சிவகணமாய் அமர்வர் இதனை நாம் வெகு விரைவில் அனுபவத்தில் கண்டு உணரலாம் ..இங்கெல்லாம் சென்றும் தங்கள் பித்ருகள் இன்னும் நற்கதி அடையவில்லை என்பதை உணர்ந்தால் அதற்கும் ஒரு சிவ தலம் உள்ளது ..அதுதான் நமது சுந்தர மூர்த்தி சுவாமிகளின் தோழரின் ஊரான ,பிறக்க முக்தி தரும் "திருவாரூர்" ஆகும்..ஆலயம்கள் ,தீர்த்தங்கள் ,சென்றும் பிதுர் பூஜை செய்தும் நம் பித்துருகள் பேய் வடிவம் கொண்டு அலய்வது போல் நமக்கு கனவிலோ ,அல்லது ஈசன் அருளால் நம் நினைவிலோ தெரிந்தால் உடனே திருவாரூர் திருத்தலம் சென்று புரட்டாசி அல்லது ஆடி அமாவாசை தினத்தில் அங்கு உள்ள கயா தீர்த்தத்தில் நீராடி [திருவாரூர் திருகோயில் சற்று தள்ளி கேக்கரை என்னும் இடத்தில உள்ளது ],திருவாரூர் திருத்தலத்தை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் நம் பித்ருகள் பேய் வடிவில் இருந்தாலும் அவ் வடிவம் நீங்கி சிவ கணமாய் சிவ புரத்தில் அமர்வர் என்பது திண்ணம் .
."...அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. ."[திருவாசகம் ..சிவ புராணம் ]
பிணியுடை யாக்கை தன்னைப்
பிறப்பறுத் துய்ய வேண்டிற்
பணியுடைத் தொழில்கள் பூண்டு
பத்தர்கள் பற்றி னாலே
துணிவுடை அரக்க னோடி
எடுத்தலுந் தோகை அஞ்ச
மணிமுடிப் பத்தி றுத்தார்
மாமறைக் காட னாரே.[அப்பர்]
- சிவ. அ.விஜய் பெரியசுவாமி ,கல்பாக்கம்




பரிமேலழகர் உரையை வைதீக சார்பானது என்போர் திருவள்ளுவரைப் புரிந்து கொள்ளவில்லை, அல்லது கிறிஸ்துவக் காலனி ஆத்க்கம் பரப்பிய பொய்களின் அடிமை , தமிழர் மெய்யியலின் பகைவர்கள் என்பது தெளிவாகும்










No comments:

Post a Comment