Saturday, June 23, 2018

திருக்குறளை இழிவு செய்யும் தமிழ் பகை(புல)வர்கள் - 2.பாவலேறு பெருஞ்சித்திரனார்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை             (அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43)
இறந்த முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்

இறந்த முன்னோர்களுக்கு கடன் செய்தல் நமது சமயத்தின்ன் மிக முக்கியமானது.
  

தமிழர் பாரம்பரியத்தில் - கடவுள் வழிபாட்டில் நம்பிக்கையில்லாதோர் திருக்குறளை ஏற்காமல் வீசலாம்,  திருவள்ளுவர் ஆஸ்திகர், ஆனால் நல்ல கல்விப் புலமை உள்ள தமிழறிஞர்கள் குறளிற்கு பைத்தியக்காரத்தனமாய் உரை சொல்லுதல் சிறந்த உதாரணம். 

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 







மணக்குடவர் உரை:
பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முன்னோர்கள், தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்ற ஐந்திடத்தும் செய்யவேண்டிய நல்வழியினைப் போற்றிக் காத்து வழுவாமல் நடந்துகொள்ளுதல் சிறப்புடைய அறமாகும்.

தெய்வத் தமிழ் மரபை இழிவு செய்யும்   பாவலேறு பெருஞ்சித்திரனார்  தமிழ் பகைவரே

No comments:

Post a Comment