Monday, April 27, 2020

முனைவர் மோகனராசு திருக்குறள் புலமையும் ஆய்வும் - முறையற்ற தன்மையும்

 பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு சென்னைப் பல்கலைக்கழகத்தில் 36 ஆண்டுகாலம் திருக்குறள் ஆய்வுத்துறையில் & கிறிஸ்துவத் தமிழ் துறை தலைவராகவும்   பணியாற்றியவர்.

"உலகத் திருக்குறள் மையம்' என்கிற அமைப்பை நிறுவிப் பல்வேறு வகைகளில் திருக்குறளைப் பரப்புவதுடன், தன்னுடைய நோக்கில் வள்ளுவர் பற்றிய கட்டுரைகளை வழங்கி பல மாநாடுகள் கூட்டியிருக்கிறார் முனைவர் கு. மோகனராசு. கடந்த 15 ஆண்டுகளாக, சனிக்கிழமைதோறும் வள்ளுவர் கோட்டத்தில் இவர் நடத்தி வருகிறார்.

முனைவர் மோகனராசுவின் ஓரிரு நூல்களை கன்னிமரா நூலகத்தில் படித்து, பின் சென்னை புத்தகக் கடைகளில் கேட்டால், யாரும் இவர் நூல்களை அறியவில்லை.  பின் இவர் நூல் வெளியிடும் பதிப்பாளர் வளாகம் செல்ல சிலபல நூல்கள் மட்டுமே இருந்தது, நூலக ஆர்டர் எதிர்பார்த்து 100 பிரதி மட்டுமே பதிப்போம் ன்றனர். இணையத்தில் தமிழியல் ஆய்வாளர்கள் இவர் பற்றி அறிந்திடவில்லை. பின்னர் சென்னையின் முக்கிய நூலகம்  எல்லாம் சென்று அவர் நூல்கள் பல படித்தேன். வள்ளுவர் கோட்டத்தில் அவர் உணவிட்டு கூட்டும் வாராந்திர கூட்டம் கலந்துகொண்டு, அவர் நூல்களை அவர் வீட்டில் சென்று படித்தேன். 

முனைவர் மோகனராசு 50 ஆண்டுகாலம் வள்ளுவம் ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவர்- மிகவும் நட்போடு திருக்குறள் ஆய்வை ஊக்குவித்தார், திருக்குறள் உரைகள் என வந்தவைகள் மட்டும் 400க்கும் மேல் வைத்து உள்ளார். அவர் ஆய்விற்கான நூல்கள் அனைத்தையும் தன் வீட்டிலேயே சேமிதுள்ளார், அதை பயன்படுத்த ஆர்வமுள்ளோருக்கு வாய்ப்பும் தருகிறார்,

திருக்குறள் மீது ஆழ்ந்த மதிப்பு தன் வாழ்வை திருக்குறள் ஆய்வில் கழிக்க அவர் கல்வியும் பணியும் உதவின, அவரது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையே -திருக்குறளும் தொல்காப்பியமும்.

ஈ.வெ.ராமசாமி நாயக்கரை, திராவிடர்  கழகம் என இடைநிலை ஜாதி இயக்கம்  நடத்தியும்  மற்றும் தமிழை கீழ்த்தரமாய்  விமர்சித்தும் திருக்குறளை மலம் எனப் பேசியும் தன் வாழ்நாள் முழுக்க திருவள்ளுவரை இழிவு செய்தரை  மதிக்கும் இவர் தன் திருக்குறள் ஆய்வினையே திருக்குறளின் வேரான இறை நம்பிக்கை - பிறவி- வினை கோட்பாடு என்பதை  மாற்றிட   பயன்படுத்துகிறார் எனும்படி தான் பல நூல்கள் அமைந்துள்ளன.


முறையான இலக்கண இலக்கிய புலமை உள்ளவர்,  திருக்குறள் கால சொல், இலக்கணம், உவமை அணி என்பதைவிட்டு - மு.தெய்வநாயகம் வழியில் 20ம் நூற்றாண்டு உரையில் தான் காட்டும் பொருள் தரும் உரைகளைக் காட்டி அணுக்கப் பொருள் என திருக்குறளை சிறுமைப் படுத்துபடி பல ஆய்வுகள் ஆய்வுநெறியின் தன்மையே தவறாய் உள்ளது.

இவர் இலக்கணப் புலமையின் ஆளம் புரிய "திருக்குறளில் திருப்புரைகள்" மற்றும் "திருக்குறள் நடைநலம்" போன்றவை ஆழமான இலக்கண ஆய்வு கொண்டவை. 50 ஆண்டுக்கும் மேலாக திருக்குறளை அன்றாடம் பயன்படுத்தும் இவருக்கும் குறள் 1330ம் முழுமையாய் மனனம் உண்டு,  திராவிஷ பற்று, வள்ளுவர் போற்றிய தமிழர் மெய்யியல் மரபை நிராகரிப்பதினால்  ன் ஞானத்தை திருக்குறளை சிறுமைப்படுத்தவே  பயன்படுத்தி உள்ளார் என்பது நடுநிலையாளர்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்

திருக்குறள் ஆய்வில் தற்போது கோட்பாடு வகுக்கிறேன் எனும் முயற்சியில் இவரது திருவள்ளுவர் வகுத்த பிறப்புக் கோட்பாடுகள், துறவுக் கோட்பாடு போன்றவை சிந்தனைக்கு நல்ல தீனியிடுபவை, ஆனால் வள்ளுவரின் அடிப்படையான் கற்பதே இறைவன் திருவடி பற்றவே, அறிவு என்பதே அறியாமையால் ஏற்படும் மீண்டும் பிறக்கும் தன்மையில் இருந்து வெளியேறி இறைவனைப் பற்றவே என்பதை ஏற்காதவர் - இவரது திராவிஷ நச்சு மூடக் கருத்துக்களை வள்ளுவர் மீது ஏற்றும் வகையில் பல நூல்கள் அமைந்துள்ளன.


No comments:

Post a Comment