Thursday, April 23, 2020

வள்ளுவர் காட்டும் முடிவு நிலை -பேரின்ப வாழ்வு -வீடு பேறு

தேவர்கள் வாழும் வானுலகம் இப்பிறவியில் நல்வினே செய்வாருக்கு உரியது என்பதைப் பல குறள்களில் திருவள்ளுவர் சொல்வதைப் பார்த்தோம். அது இந்த உலகத்தினும் சிறந்தது; மேன்மை உடையது; மேலே இருப்பதாகக் கற்பனே பண்ணப்படுவது; ஆதலின் அதனே மேலுலகம் என்றும் சொல்வர்.
மேலுலகம் - இல்லெனினும் ஈதலே நன்று' (222)
என்ற குறளில் புண்ணியத்தின் பயணுகக் கிடைக்கும் சொர்க்கத்தை மேலுலகம் என்ருர் திருவள்ளுவர்.
கல்வினை செய்தவர்கள் புத்தேளுலகைப் பெறுவது போலத் தீவினே செய்தவர்கள் கரகம் பெறுவார்கள் என்பது இந்த நாட்டுச் சமயங்களின் நம்பிக்கை, நரகத்தை கிரயம் என்றும் சொல்வர். அது துன்பம் கிறைந்தது, இருள் கிரம்பியது என்று நூல்கள் கூறும். நரகங்கள் பலவென்றும், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான துன்பத்தை உயிர்கள் அநுபவிக்கும் என்றும் புராணங்கள் பேசுகின்றன.
1. மேலுலகம் என்பதற்கு வீடு என்று பொருள் கொண்டார் பரிமேலழகர், சொர்க்கத்துக்கு எதிர்த்தட்டிலே நரகம் ஒன்று உண்டு என்பதைத் திருவள்ளுவரும் கூறுகிரு.ர். சொர்க்கம் இன்பமே நிரம்பியது; நரகம் துன்பமே நிறைந்தது; இவ்வுலகம் இன்பமும் துன்பமும் கலந்தது.
பலவகை நற்செயல்களே இவ்வுலகிலே செய்தவர்கள் தேவலோக வாழ்வில் இன்பம் பெறுவார்கள் என்று சொன்ன திருவள்ளுவர், பல வகையான தீய செயல்களைப் புரிந்தவர்கள் நரக வாழ்வில் துன்பம் அடைவார்கள் என்றும் சொல்கிருர். நல்லவற்றைச் செய்து தீயவற்றை விலக்க வேண்டும் என்று சொல்லும் சிறந்த நீதிநூல் திருக்குறள். தீயவற்றை விலக்குதற்குரிய காரணங்களைச் சொல்லும்போது, இம்மையில் பழியையும் துன்பத்தையும், பிறகு நரகத் துன்பத்தையும் அவை உண்டாக்கும் என்று சொல்கிரு.ர். - -
நரகத்தை ஆரிருள், தீயுழி, இருள் சேர்ந்த இன்ன உலகம், அளறு என்று வள்ளுவர் கூறுகிருர். நரகத்தைப் பெறுகிறவர்கள் யார் யார்?
அடக்கத்தின் பெருமையைச் சிறப்பிக்க வந்தவர் அதை உடையவர் தேவருலக வாழ்வு பெறுவர் என்று கூறியதோடு, எதிர்மறை முகத்தால் அடங்காதவர் கரக வாழ்வு பெறுவர் என்கிரு.ர்.
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை , ஆரிருள் உய்த்து விடும். . (121)
அடங்காத இயல்பு ஆரிருளிற் செலுத்தி விடுமாம். அமரருள் என்று தேவருலகத்தைச் கட்டியவர். அதற்கு  எதிராகிய நரகத்தை ஆரிருள் என்ருர். ஆர் இருள்பாவம் தங்குதற்குரிய இருள். இருள் என்பது ஒர் கரக விசேடம்’ என்று பரிமேலழகர் உரை எழுதினர். இருள் என்பது அறியாமைக்கும் துன்பத்துக்கும் உரியதாக வழங்கும் சொல். இங்கே, நரகம் இருள் நிரம்பிய இடம் ஆதலின் இருள் என்று சொன்னர். இது பின்னலே வரும் குறள் ஒன்ருல் தெளிவாகும்.
இயல்பாக எல்லா உயிர்களிடத்திலும் கருணையுடன் இருக்கவேண்டும். அந்தக் கருணையையே அருள் என்று கூறுவர். அதன் சிறப்பை அருளுடைமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறியிருக்கிருர். அருள் சேர்ந்த நெஞ்சை உடையவர்கள் நலம் பெறுவர் என்றும், அப் பண்பு இல்லாதவர் துன்பம் உறுவர் என்றும் சொன்னர். அருளுடையார் நலம் பெறுவதோடு, துன்பம் அடைய மாட்டார் என்றும் கூறி, அதன் பெருமையை எடுத்துக் காட்டுகிரு.ர். х .
அருள்சேர்ந்த நெஞ்சிர்ைக் கில்லை, இருள்சேர்ந்த இன்னு உலகம் புகல். (243)
அந்தக் குறள், அருள் செறிந்த நெஞ்சினை உடை யார்க்கு, இருள் செறிந்த துன்ப உலகத்துள் புகுதல் இல்லை என்று சொல்கிறது. இங்கே, இருள் சேர்ந்த இன்னு உலகம்’ என்றது. நரகத்தை. இங்கே இத் தொடரை விளக்க வந்த பரிமேலழகர், திணிந்த இருளே யுடைத்தாய்த் தன்கட் புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை; அது கீழ் உலகத்துள் ஒரிடமாதலின் உலகம் எனப்பட்டது என்று எழுதினர். தேவருலகம் ஒளி யுடையது; மேலுலகமாக இருப்பது. அதற்கு எதிரான நரகம் இருள் நிரம்பியது; கீழுலகமாக இருப்பது. நரகங்கள் பல என்பதை எண்ணி, துன்பம் செய்வது ஓர் நரகத்தை' என்று பரிமேலழகர் எழுதினர்.
இன்னமையும் இருளும் கிரம்பியது நரகலோகம் என்பதை மேலே காட்டிய இரண்டு குறள்களும் புலப் படுத்துகின்றன.
அழுக்காற்றின் தீமையைச் சொல்ல வந்தவர்,
அழுக்கா றென.ஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் (168)
என்று கூறுகிருர். அழுக்காறு ஒருவனுக்கு இம்மையில் செல்வத்தை அழித்து, மறுமையில் நரகத்தில் அழுத்தி விடுமாம். நரகத்தைத் தீயுழி என்கிருர். அதற்குத் திய இடம் என்பது பொருள்; இங்கே நரகத்துக்காயிற்று. தீயவர் சேரும் இடம், துன்பத்தையே நுகரச் செய்யும் இடம் ஆதலின் இப் பெயர் பெற்றது.
வேறு இரண்டு இடங்களில் நரகத்தை அளறு என்று குறிக்கிருர். புலால் உண்பதனுல் விளேயும் விளைவையும், பேதைமையால் உண்டாகும் துன்பத்தையும் கூறும் இடங்கள் அவை.
உண்ணுமை உள்ள துயிர்நிலை, ஊன் உண்ண அண்ணுத்தல் செய்யா தளறு. (225)
‘புலால் உண்ணுமையில்ை பல உயிர்கள் உடம்பில் கிற்கும் கிலே இருக்கிறது; அந்த கிலே குலையும்படி ஒருவன் ஊனே உண்டால் அவனே விழுங்கிய நரகம் பிறகு உமிழாது என்பது இதன் பொருள். அண்நரகம் இருள் நிரம்பியது; கீழுலகமாக இருப்பது. நரகங்கள் பல என்பதை எண்ணி, துன்பம் செய்வது ஓர் நரகத்தை' என்று பரிமேலழகர் எழுதினர்.
இன்னமையும் இருளும் கிரம்பியது நரகலோகம் என்பதை மேலே காட்டிய இரண்டு குறள்களும் புலப் படுத்துகின்றன.
அழுக்காற்றின் தீமையைச் சொல்ல வந்தவர்,
அழுக்கா றென.ஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் (168)
என்று கூறுகிருர். அழுக்காறு ஒருவனுக்கு இம்மையில் செல்வத்தை அழித்து, மறுமையில் நரகத்தில் அழுத்தி விடுமாம். நரகத்தைத் தீயுழி என்கிருர். அதற்குத் திய இடம் என்பது பொருள்; இங்கே நரகத்துக்காயிற்று. தீயவர் சேரும் இடம், துன்பத்தையே நுகரச் செய்யும் இடம் ஆதலின் இப் பெயர் பெற்றது.
வேறு இரண்டு இடங்களில் நரகத்தை அளறு என்று குறிக்கிருர். புலால் உண்பதனுல் விளேயும் விளைவையும், பேதைமையால் உண்டாகும் துன்பத்தையும் கூறும் இடங்கள் அவை.
உண்ணுமை உள்ள துயிர்நிலை, ஊன் உண்ண அண்ணுத்தல் செய்யா தளறு. (225)
‘புலால் உண்ணுமையில்ை பல உயிர்கள் உடம்பில் கிற்கும் கிலே இருக்கிறது; அந்த கிலே குலையும்படி ஒருவன் ஊனே உண்டால் அவனே விழுங்கிய நரகம் பிறகு உமிழாது என்பது இதன் பொருள். அண்நரகம் இருள் நிரம்பியது; கீழுலகமாக இருப்பது. நரகங்கள் பல என்பதை எண்ணி, துன்பம் செய்வது ஓர் நரகத்தை' என்று பரிமேலழகர் எழுதினர்.
இன்னமையும் இருளும் கிரம்பியது நரகலோகம் என்பதை மேலே காட்டிய இரண்டு குறள்களும் புலப் படுத்துகின்றன.
அழுக்காற்றின் தீமையைச் சொல்ல வந்தவர்,
அழுக்கா றென.ஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் (168)
என்று கூறுகிருர். அழுக்காறு ஒருவனுக்கு இம்மையில் செல்வத்தை அழித்து, மறுமையில் நரகத்தில் அழுத்தி விடுமாம். நரகத்தைத் தீயுழி என்கிருர். அதற்குத் திய இடம் என்பது பொருள்; இங்கே நரகத்துக்காயிற்று. தீயவர் சேரும் இடம், துன்பத்தையே நுகரச் செய்யும் இடம் ஆதலின் இப் பெயர் பெற்றது.
வேறு இரண்டு இடங்களில் நரகத்தை அளறு என்று குறிக்கிருர். புலால் உண்பதனுல் விளேயும் விளைவையும், பேதைமையால் உண்டாகும் துன்பத்தையும் கூறும் இடங்கள் அவை.
உண்ணுமை உள்ள துயிர்நிலை, ஊன் உண்ண அண்ணுத்தல் செய்யா தளறு. (225)
‘புலால் உண்ணுமையில்ை பல உயிர்கள் உடம்பில் கிற்கும் கிலே இருக்கிறது; அந்த கிலே குலையும்படி ஒருவன் ஊனே உண்டால் அவனே விழுங்கிய நரகம் பிறகு உமிழாது என்பது இதன் பொருள். அண்ளுத்தல்-வாயைத் திறத்தல். புலால் உண்பவன் நரக வாழ்வை நீண்ட காலம் பெறுவான் என்பதையே இந்த முறையில் குறிப்பித்தார். ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம் என்று பரிமேலழகரும் கருத்தை விளக் கினர்.
ஒருமைச் செயல் ஆற்றும் பேதை, எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. (835)
'அறியாமையையுடைய பேதை வரும் பிறவி வகைகளாகிய ஏழிலும் தான் புகுந்து அழுந்தும் நரகத்தை, இந்த ஒரு பிறப்புக்குள்ளே செய்து கொள்ள வல்லவனவான்’ என்பது பொருள். ஏழு பிறவிகளில் செய்த பாவத்தினுல் எந்த நரக வாழ்வு கிடைக்குமோ, அந்தக் கொடிய வாழ்வை ஒரு பிறவியிலே செய்த செயலாலே அடைந்து விடுவானம். அளறு என்ற சொல்லுக்குச் சேறு என்பது ஒரு பொருள். தன்னிடம் அகப்பட்டார் மீள முடியாதபடி மேலும் மேலும் அழுந்தச் செய்வதல்ை நரகத்தை அளறு என்ருர். இக்குறளில் அழுந்தும் அளறு என்று சொன்னது இதனைப் புலப் படுத்தும்.
ஒளியற்றது, இருள் நிரம்பியது, துன்பம் நிறைந்தது, தீயது, தன்பால் வந்தவர்களே எளிதில் வெளி விடாதது, மேலும் மேலும் ஆழப் பண்ணுவது என்ற நரகத்தின் இயல்புகளைத் திருக்குறளின் வாயிலாக நாம் உணர்கிருேம்.
மூவுலகம் என்பது ஒரு வழக்கு. இதை, முப் புணர் அடுக்கு' என்று புறநானூறு கூறுகிறது.
இருப்பது; நரக லோகம் கீழே இருப்பது. உலகில் பிறந்த உயிர்கள் பல பல செயல் களேச் செய்கின்றன. நற்செயல்களேயும் தீய செயல் களேயும் புரிகின்றன. கல்வினைகள் மிகுதியானல் சொர்க்க பதவியையும், தீவினேகள் மிகுதியானல் நரகத் துன்பத்தை யும் பெறும். இரு வினேகளும் கலந்திருந்தால் நிலவுலகில் பிறந்து இன்ப துன்பத்தை நுகரும். சொர்க்கமும் நரகமும் அநுபவத்திற்கே உரியவை. நிலவுலகம் அநுபவத்துக்கும் செயலுக்கும் உரியது. உயிர் இந்த மூன்று உலகங்களிலும் சென்று சென்று உழன்றுகொண்டே இருக்கும். .
'உருமாறிப் பவக்கடல்வீழ்ந் துரசலெனத் தடுமாறி
உழலும் மாக்கள்’
என்று ஒரு புலவர் கூறுகிரு.ர்.
உயிரின் வாழ்க்கைப் பயணம் நிற்பதே இல்லை. இந்த மூன்று உலகங்களிலும் புகுந்து புகுந்து புறப்படுகின்றது. அறியாமையினின்றும் நீங்கிப் பற்றற்று இரு வினே களிலிருந்தும் நீங்கினல் இந்த மூன்று உலகங்களின் வாழ்வினின்றும் உயிர் நீங்கி விடுதலை பெறும். இன்ப துன்பங்களே நுகரும் நுகர்ச்சி இருக்கும் வரையில் உயிருக்குப் பிறப்பு உண்டு. பிறப்பு-இறப்பு, இன்பம். துன்பம், செயல்-நுகர்ச்சி, போக்கு-வரவு, இரவு-பகல், அறிவு-அறியாமை, நன்மை-தீமை முதலிய இரட்டைகளி னின்றும் விடுபட்ட உயிருக்குச் சொர்க்கம், நிலவுலகம், நரகம் என்ற மூன்று உலகிலும் வாழும் வாழ்க்கை இராமற் போய்விடும். அந்த வாழ்க்கையினின்றும் விடுதலே பெறுவதே வீடு. முக்தி என்பதும் அதுதான். ‘. . . . . .
முக்தி என்னும் கிலே உயிருக்கு முழுமை தருவது. இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அப்பாற்பட்ட ஆனந்தத்தை நுகரும் கிலே அது. இன்ப துன்ப நுகர்ச்சி மனத்தைச் சார்ந்தது. உயிர் முக்தியைச் சாரும்போது மனம் அழிந்துவிடும். ஆகவே, அங்கே நுகர்ச்சியைப் பெறுவது உயிர். உயிரில் நேரே புகும் இன்பமே வீட்டின்பம். வீட்டின்பத்தின் இயல்பை இந்த நாட்டிலுள்ள சமயத் தினர் வெவ்வேறு வகையிலே சொன்னலும், அந்த இன்பம் சுகதுக்கங்களுக்கு அப்பாற் பட்டது, உயிரால் நுகரப்பெறுவது என்பதை யாவரும் ஒப்புக்கொள் கின்றனர். - -
மனிதன் அடைய வேண்டிய உறுதிப் பொருள்கள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. முடிந்த முடிபாகிய உறுதிப் பொருள் வீடு அல்லது முக்தி.
வீடு என்பது மேலே சொன்ன மூன்று நிலை களுக்கும் அப்பாற் பட்டது. நரகத்தினும் உயர்ந்தது நிலவுலகம்; அதனினும் உயர்ந்தது தேவருலகம்; அதனினும் உயர்ந்தது வீட்டுலகம். அந்த முடிந்த நிலை யாகிய வீட்டைப் பற்றிய செய்திகளைத் திருவள்ளுவர் கூறுகிருர்.
திருக்குறள் முப்பால் என்னும் ஒரு பெயரை உடையது. அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களே உடையதாதலின் அப்பெயர் பெற்றது. வீட்டுப் பால் என்று தனியே அவர் கூறவில்லை. ஆயினும் வீட்டு நெறியைப்பற்றி அடியோடு கூருமல் விட்டுவிடவும் இல்லை. விடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா கிலேமைத்து ஆதலின், துறவறமாகிய காரணவகையால் கூறப்படுவ தல்லது இலக்கண வகையால் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனே மூன்றுமேயாம்' என்று பரிமேலழகர் திருக்குறள் உரைப்பாயிரத்தில் எழுதுகிரு.ர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினுர்க்கினியர் ஓரிடத்தில், தொல்காப்பியர் வீடு கூருரோ எனின், அகத்தியனரும் தொல்காப்பியனரும் வீடு பேற்றுக்கு கிமித்தம் கூறுதலன்றி, வீட்டின் தன்மை இலக்கணத்தால் கூருர் என்று உணர்க....................... இக்கருத்தானே வள்ளுவனரும் முப்பாலாகக் கூறி மெய் உணர்தலான் வீடு பேற்றுக்கு நிமித்தம் கூறினர்’ என்று உரைத்தார். (தொல்காப்பியம், சிறப்புப்பாயிர உரை.)
ஆகவே திருவள்ளுவர் வீட்டின் இலக்கணத்தைத் தனியே விரித்துக் கூருவிட்டாலும் அதைப்பற்றிய செய்திகளைச் சொல்லியிருக்கிருர் என்று தெரிகிறது.
வீட்டுலகம் எல்லாவற்றினும் உயர்ந்தது; வானவர் உலகத்தினும் உயர்ந்தது. இந்தக் கருத்துக்களைத் திருக் குறளிற் காணலாம்.
உரன் என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்புக்கோர் வித்து. (24)
'அறிவு என்னும் அங்குசத்தால் ஐந்து பொறிக ளாகிய யானைகளே அவை போனவழி போகாமல் தடுத்துக் காப்பவன், எல்லா உலகத்திலும் மேலானது என்று சொல்லப்படும் வீட்டு கிலத்திற் சென்று முளைக்கும் வித்துப் போன்றவன்' என்பது இதன் பொருள். இங்கே வீட்டை வரன் என்னும் வைப்பு என்ருர் வரன் என்பதற்கு மேலானது என்பது பொருள். எல்லாவற்றிற்கும் மேலான நிலை முத்தி யாதலின் இவ்வாறு கூறினர். பொதுவாக மேலுலகம் என்று வானுலகைச் சொல்வது வழக்கம். அந்த மேலுல கத்துக்கும் மேலுலகம் இது என்பதையும் ஒரு குறள் குறிக்கிறது.

யான் என தென் னும் செருக்கறுப்பான் வானுேர்க்
குயர்ந்த உலகம் புகும். (346)
இதில், வானேர்க்குயர்ந்த உலகம் என்றது வீட்டை. வானுேர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகம்’ என்று பரிமேலழகரும், வானுேராகிய கடவுளர்க் கெல்லாம் மேற்பட்ட முழுப் பேரின்பமாகிய முத்தி என்று காளிங்கரும் எழுதினர்.
தேவருலகு, நிலவுலகு, கரகம் என்னும் மூன்றிலும் சென்று வாழும் உயிர் அந்த அந்த இடத்திலே என்றும் கிலேயாக இருப்பதில்லை. புண்ணியப் பயன் உள்ள மட்டும் சொர்க்கவாழ்வு இருக்கும்; பின்பு நிலவுலகில் உயிர் வந்து பிறக்கும். நரக வாழ்வும் அத்தகையதுதான்; பாவப் பயன் கழிந்தால் மீட்டும் நிலவுலக வாழ்வு வரும். அவ்வாழ்வில் மீட்டும் செய்யும் கல்வினை தீவினைகளுக்கு ஏற்றபடி அதன் பின் உண்டாகும் வாழ்க்கை அமையும். இந்த மூன்று இடங்களில் எங்கும் உயிர் கிலேயாகத் தங்காது. - -
இந்த மூன்று கிலேயும் கடந்த வீட்டுலகில் உயிர் புக்கால் மீட்டும் அது பிறவியை அடையாது; அங்கே கிலேயாகத் தங்கிவிடும்; அதன் பயணம் முற்றுப் பெறும் மறுபடியும் இங்கே வந்து பிறவாத கிலே அது. இதை,
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி (356)
என்ற குறள் சொல்கிறது. இம்மக்கட்பிறப்பில் கற்க வேண் டியவற்றைக் கற்று மெய்ப்பொருளே உணர்ந்தவர்கள், மீண்டும் இவ்வுலகத்துக்கு வாராத நெறியாகிய வீட்டை அடைவர் என்பது பொருள். ... "
"மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே"
(சிவபுராணம்)
என்பது திருவாசகம்.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு (340)
என்னும் குறளில் வீட்டையே புக்கில் என்கிருர். துச்சில் என்பது சில காலம் வாழ்ந்து புறப்படும் இல்லம்; குடியிருக் கும் வீடு. புக்கில் என்பது புகுந்து எப்போதும் வாழும் சொந்த வீடு. இந்த உயிர் ஓர் உடம்பை விட்டு மற்ருேர் உடம்பிற் புகுந்து மாறி மாறிப் பிறந்து, அடிக்கடி வீடு மாற்றும் குடித்தனக்காரனேப் போல இருக்கிறதே; @5) குச் சொந்தமாக எப்போதும் பேராமல் வாழ்வதற்குரிய வீடு ஒன்றும் அமையவில்லே போலும்!’ என்று இரங்குகிருர் திருவள்ளுவர். ‘புக்கில் என்பது முத்தித்தானம் என்று விளக்குவார் மணக்குடவர். முத்தி நிலையைப் பேரா இயற்கை (370) என்று ஒரு குறள் கூறு 10. - to . . . . . . 

உறுதிப் பொருள்களில் ஒன்ருக வரும் இன்பம் என்பது ஒருவனும் ஒருத்தியும் தம்முள் ஒன்றுபட்டுப் பெறும் இன்பம். உள்ளமும், உடம்பும் நுகரும் இன்பம் அது. அதனைச் சிற்றின்பம் என்று சொல்வதுண்டு. பேரின்பம் ஒன்று இருத்தலின் அதனே அவ்வாறு கூறுவர். வீட்டின்பந்தான் பேரின்பம். அது இணையற்ற கிரதிசய இன்பம். -
இருள் நீங்கி இன்பம் பயக்கும், மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. (352)
- இந்தக் குறள், அறியாமையினின்றும் நீங்கிக் குற்ற மற்ற மெய்ஞ்ஞானம் பெற்றவர்களுக்கு, அந்த ஞானம் பிறப்பினை நீங்கச் செய்து பேரின்பமாகிய வீட்டை அளிக் கும் என்னும் பொருளுடையது. ம்ெப் உணர்தல் என்னும் அதிகாரத்தில் வரும் குறள் இது. மெய்யுணர் வாகிய ஞானத்தைப் பெற்றவர்கள் வீட்டின்பம் பெறுவார் கள் என்னும் கருத்தைச் சொல்கிறது. இது. இங்கே வீட்டை இன்பம் என்றே சொல்கிருர், வீடாவது நிரதிசய இன்பம் என்பது இதல்ை பெறப்பட்டதாகப் பரிமேலழகர் குறிக்கிருர்.
எல்லா கிலேகளிலும் மேலானது வீடு என்பதும், அது பெற்ருர் சொர்க்கம் நகரம் நிலவுலகம் என்னும் மூன்று நிலைகளையும் அடையார் என்பதும், அங்கே நிலையாக இருப்பார் என்பதும், தேவர்களுக்கும் எட்டாத சிறப்புடை யது அது என்பதும், பேரின்பமயமானது என்பதும் முன்னே பார்த்த திருக்குறட்பாக்களால் தெரியவரு கின்றன. -
உலக வாழ்வு பெற்ற உயிர் முடிந்த முடியாக விட் டின்பம் பெறுவதே லட்சியும் என்பது எல்லாச் சமயத்திற்கும் உடம்பாடு. அதனேத் திருவள்ளுவரும் எடுத்துச் சொல்கிரு.ர். - - -
இதுவரையில் கூறியவற்ருல், இவ்வுலக வாழ்வு, அமரருலக வாழ்வு, நரக வாழ்வு என்ற மூன்றும் உண் டென்பதும், இவற்றிற்கு மேலாக முடிந்த முடிபான, பேரின்ப வாழ்வு தரும் வீடென்பது ஒன்று உண்டு என். பதும் திருவள்ளுவருக்கு உடம்பாடு என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

3 comments:

விஸ்வேஸ்வரன் said...

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும்...
பிறப்பு ஒக்கும் என்பது பிறக்கும்போது எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் பிறக்கிறோம்.
இந்தக் கருத்து எல்லா உயிர்க்கும் பொருந்துவதாகும்.

அதாவது முற்பிறவியின் பயனர் தாக்கப்பட்ட ஆன்மா மறுபிறவியில் பல வேறு உயிர்களாக பிறக்கிறது என்ற கருத்தை மறுப்பதற்குத்தான் எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்று சொல்லுகிறார்.

ஒவ்வொரு உயிர்க்கும் அந்த இனத்தை அளவில் பிறப்பு ஒக்கும்.

ஒவ்வா சிறப்பு செய்தொழில் வேற்றுமையில் வருகிறது.

ஏற்றுக்கொள்ள இயலாத சிறப்பு .
அதாவது தோட்டி வேலை செய்பவனும் அரசு அதிகாரங்களில் இருப்பவனும் மந்திர ஓதுபவரும் வேறு வேறு தொழிலைச் செய்யலாம் .
ஆனால் அதனால் எவருக்கும் சிறப்பு ஏற்படுவதில்லை .
அதை சிறப்பாக கருதுவது ஏற்றுக்கொள்ள முடியாது

DEVAPRIYA said...

ஐயா உங்களுக்கு தமிழ் புரிதலில் மிகவும் தெளிவின்மை
வேண்டுங்கால் வேண்டாம் பிறவாமை
அவா என்பது எஞ்ஞான்றும் பிறப்பு ஈனும் வித்து
மற்று ஈண்டு வாரா நெறி என்பவற்றை எல்லாம் ஏற்காமல், வள்ளுவத்தை சிதைத்து பொருள் கொள்ளுவது மரபல்ல

DEVAPRIYA said...

உங்களுக்கு தமிழ் மரபு இலக்கணமும் தெரியவில்லை, திருக்குறளை சிறுமை செய்யும் திராவிட கயமையும் அன்னிய மதங்களின் அடிமை என்பதையும் நிருபிக்கின்றீர்.
ஒக்கும் என்றால் பிறப்பு தாய் வயிற்றில் சுமந்து பிரிசவம் என ஒரே மாதிரி அமைகிறது. பெருமைகள் செய்யும் தொழிலிற்கு ஏற்ப ஒரே மாதிரி அமைவதில்லை என்பது தானே வள்ளுவம்

Post a Comment