Sunday, May 24, 2020

திருக்குறள் ஆன்மிக நூல்

திருக்குறள் ஆன்மிக நூல், ஆதி பகவன் முதற்றே உலகு என இவ்

அகர முதல எழுத்தெல்லாம ஆதி
பகவன் முதற்றே உலகு  (குறள்.1)

என்றார் அதாவது, எழுத்துகளுக்கெல்லாம் அகரம் முதன்மையாகவும் காரணமாகவும் இருத்தல் போல, கடவுள் உலகிற்கு முதன்மையாகவும் அடிப்படையாகவும் உள்ளார் என்கிறார். ஓர் அதிகாரம் முழுமையும் கடவுளின் பண்பையும், அவனை வழிபடுவதால் அடையும் பயனையும் வள்ளுவம் முனைப்புடன் அறிவுறுத்துகிறது.
அறிவு என்பதே - மீண்டும் மீண்டும் பிறக்கும் அறியாமை எனும் பேதைமையில் இருந்து நீங்க சிறப்பு பேரின்பம்- வீடுபேறு தரும் இறைவனை அறிவதற்கே என்கிறார்.
கற்றதானால் ஆய பயந் நிறைவான அறிவன் இறைவன் திருவைடியை பற்றிக் கொள்ளவே என்பார், இறைவன் திருவடி பற்றிக் கொண்டால் மட்டுமே மீண்டும் மீண்டும் பிறக்கு பிறவிக் கடலைக் கடக்க இயலும் என்பார்.
வள்ளுவர் ஒரு முழுமையான் ஆஸ்திகர் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

ஒருவனுக்கு கல்வி எதற்கு
 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.                          குறள் 03 -கடவுள் வாழ்த்து
ஒருவர் கற்ற கல்வியினால் தூய அறிவு வடிவாக விளங்கும் உலகினைப் படைத்த தெய்வத்தின் நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், ஆகிய பயன்  என்ன?
தான் பெற்ற கல்வியினால் அறச் செயல்கள் செய்ய வேண்டும் வீடுபேறு அடையவே.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.               குறள் 38:  (அறன்வலியுறுத்தல்)
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
        மற்றீண்டு வாரா நெறி.  356.                       மெய்யுணர்தல்

கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று  மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

 கடவுள் வாழ்த்து
பால்: அறம். இயல்: பாயிரம். அதிகாரம்: கடவுள் வாழ்த்து.


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.              குறள் 1: 
மணக்குடவர் உரை: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.           குறள் 2:
மணக்குடவர் உரை: மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின்.சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.  குறள் 3:
மணக்குடவர் உரை:
மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. குறள் 4:
மணக்குடவர் உரை:இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர். பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறள் 5:
மணக்குடவர் உரை:மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.குறள் 6:
மணக்குடவர் உரை:
மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்? இது சாவில்லையென்றது.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. குறள் 7:
மணக்குடவர் உரை:தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லரிது. வீடுபெறலாவது அவலக்கவலைக் கையாற்றினீங்கிப் புண்ணிய பாவமென்னுமிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத்தலுமில்லாத தொரு தன்மையை யெய்துதல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார். அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலின்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. குறள் 8:

மணக்குடவர் உரை:அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. குறள் 9:
மணக்குடவர் உரை:
அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10:

மணக்குடவர் உரை:
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்

357. ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
        பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
ஒருவன் உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.


358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
        செம்பொருள் காண்ப தறிவு.  

மீண்டும் மீண்டும் பிறப்பு எனும்  அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

37. அவாவறுத்தல்

361. அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
        தவாஅப் பிறப்பீனும் வித்து. 

எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் மீண்டும் மீண்டும்  வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர். 

362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
        வேண்டாமை வேண்ட வரும். 

பிறப்புத் துன்பத்தினை உணர்ந்தவன் ஒன்றினை விரும்பினால், அவன் பிறவாமை என்பதனையே விரும்புதல் வேண்டும். அவன் ஆசை இல்லாமையை விரும்ப, அவனுக்கு அப்பிறவாமை உண்டாகும்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 
திறந்தெரிந்து தேறப் படும்.   குறள் 501:  தெரிந்துதெளிதல்
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

அறம், பொருள், இன்பம் - மூன்றோடு உயிர் அச்சம் எனச் சொல்லும் வள்ளுவரே - இந்த உயிரின் காலம் என்பதை
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
  விழிப்பது போலும் பிறப்பு - குறள் 34:9
உயிர் அச்சம் என்பது உறுதிப் பொருளான வீடுபேறை அடைய அறவழியையே கூறுவார்

No comments:

Post a Comment