பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972: பெருமை) பிறப்பு ஒக்கும் – இயல்பு என்பது பிறப்பால் ஒன்றுதான்
எல்லா உயிர்க்கும் – யாவர்க்கும்
சிறப்பு ஒவ்வா – பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது
செய்தொழில் – அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள
வேற்றுமையான் – வேற்றுமைகளால்
எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் ஒரே தன்மையுடையது; செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக இருக்காது .
யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –( கணியன் பூங்குன்றனார்) எனும் கோட்பாடு படி ஒருவன் செய்யும் செயல் அதில் உள்ள அறத்தின் பலன்(புண்ணியமே) உன் நிலையை தீர்மானிக்கும். வள்ளுவர் நீ இப்பிறவியில் செய்யும் அறத்தின் பயன் உன் அடுத்து எழும் பிறவிகளில் நல்லது செய்யும் என்பார்.எல்லா உயிர்க்கும் – யாவர்க்கும்
சிறப்பு ஒவ்வா – பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது
செய்தொழில் – அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள
வேற்றுமையான் – வேற்றுமைகளால்
எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் ஒரே தன்மையுடையது; செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக இருக்காது .
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள்.36 அறன்வலியுறுத்தல்
பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழிந்த பின்பும் மறுமையில் அழியா துணையாகும்.
வள்ளுவர் ஒரு அரசன் தன் நாட்டை ஆளும் செங்கோல் பிராமணர்களின் வேதங்கள் மற்றும் அறநூல்களுக்கு அடிப்படையாய் இருக்க வேண்டும் என்பார்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள்.543 செங்கோன்மை
நாட்டைக் காக்கும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள்- அறநூல்களை மறப்பர்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். குறள் 560 கொடுங்கோன்மை
ஒரு பெரும் சமுதாயத்தில் பணிக்கு ஏற்ப சட்டங்கள் அமையும், அஹிம்சையையும், புலால் மறுத்தலையும் போற்றி துறவரவியலில் கூறிய வள்ளுவர்.
சட்டம் - ஒழுக்கு என வருகையில் அது அவரவர் தொழில், தன்மைக்கு ஏற்ப மாறும் இதை நாம் திருக்குறளிலேயே காணலாம். அஹிம்சை, புலால் மறுத்தலை வலியுறுத்தும் வள்ளுவர் கொடியோரை (பாழ் செய்யும் உட்பகை இல்லாதபடிக்கு) - வயலைல் களை பிடுங்க் எரிதல் போலே மொழி - இனம் எனப் பிரிவினை தூண்டும் கொடியோரை வேரோடு அழிக்க வேணும் என்பார்
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். செங்கோன்மை குறள் 550
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். ஒற்றாடல் குறள் 582
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் ஒழுக்கமுடைமை குறள் 134:
பிராமணன் தினமும் கூறும் வேதங்களை மறந்தாலும் மீண்டும் நினைவில் கொணரலாம், ஆனால் தன் குடிப்பிறப்பு ஆசாரத்தில் குன்றினால் கெடு்ம்.
தமிழருள் பகைமூட்ட கிறிஸ்துவ நச்சுப் பரப்பல் செய்த தேவநேயப் பாவாணனைப் போலும், காலனி ஆதிக்க சர்ச் அடிமைகள் தமிழை காட்டிமிராண்டி எனப் பழித்த ஈ.வெ.ராமாசாமி வழி தமிழின் எதிரிகளும்
அற நூல் எழுதிய வள்ளுவரை வைத்து - இந்தக் குறள் மூலம் தமிழர் மெய்யியல் மரபை நிராகரிக்கிறார் என பிதற்றுவர்.
பொய்யான உரைகள்.
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான். என்பதை செய்யும் தொழிலால் வரும் வேறுபாட்டு சிறப்புகளும் பொருந்தாது என கதைக்கின்றனர்.
சிறப்பு ஒவ்வா உள்ள ஒவ்வா வேறோர் குறளிலும் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்.
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண் ஒவ்வேம் என்று. குறள் 1114:
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
ஒவ்வாக- ஒப்பாக -சமமாக - ஈடாக- இணையா
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் - செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
வள்ளுவர் மிகத் தெளிவய் ஒவ்வொருவரையும் அவரவர் தொழில் - தகுதி அடிப்படையில் தான் நோக்க வேண்டும் பொதுமைப் படுத்தி பார்க்கலாகாது எனவும் தெளிவாய் உரைக்கின்றார்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528 சுற்றந்தழால்
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
திருக்குறளில் தெய்வப் புலவரே தெளிவாய் யோரோடு சேர வேண்டும் - தவறான மோசடியாளரோடு இணைந்தால் கேடு என்பதை-
.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். குறள் 508: தெரிந்துதெளிதல்
ஒருவரை ஆராய்ந்து பார்க்காமல் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் தனக்கு மட்டும் அல்லாமல் அவரால் வருங்காலத் சந்ததியினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்
சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டம் அவரை தவறாய் வழிகாட்டும்
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. குறள் 452: சிற்றினஞ்சேராமை
நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து. சிற்றினஞ்சேராமை குறள் 458
நிறைகுணம் பெற்றவராக இருந்தாலும் நன்கு கற்ற சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை அமையும்
கிறிஸ்துவ மதமாற்ற வேசித்தனத்தால் தமிழரை ஆரியர் - திராவிடர் என பொய்யான மோசடி நச்சு பரப்புவோரோடு பழகும் தமிழறிஞர்கள் வள்ளுவத்தினை சிதைக்கும் உரை தவறான கூட்டு தான்.
நச்சு கிறிஸ்துவமும், தமிழை காட்டு மிராண்டி பாஷை; தமிழை அழிக்கவே திராவிடம் என சொல்லியோர் கூட்டத்தில் இணைவோர் திருக்குறளை இழிவு செய்கின்றனர்.
No comments:
Post a Comment