Friday, April 10, 2020

திருக்குறளும் கூறும் வர்ணத்திற்கான தனித் தனி அறம்










































































நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 452

‘தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை’. { குறள் 964}

திருவள்ளுவர் கூறுவதை மனதில் ஏற்று இகல் இன்றி பொருள் கூறுங்கள் பிறகு சமுதாய நிலையில் அன்றைய நிலையையும் யோசித்துப் பாருங்கள்.

கல்வி அனைவரையும் சமன் செய்யும் கருவி தான் ஆனால் கல்வி என்பது அடிப்படை கல்வி உலகில் பரவலாக அனைத்து பிரிவினருக்கும் கொடுத்து பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை திண்ணை கல்வி மூலம் கொடுத்துவந்த ஒரே சமுதாயம் இந்தியா மட்டுமே தான் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை

குறள் 409:
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.




குணமும் குடிமையும் குற்றமும் குன்றா 

இனனும் அறிந்தியாக்க நட்பு.


குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் 

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.


நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 

இனத்தியல்ப தாகும் அறிவு

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.


மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் 

இன்னான் எனப்படுஞ் சொல்

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு 

இனத்துள தாகும் அறிவு.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் 
இனந்தூய்மை தூவா வரும்


மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.


நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவுமேலைத்
தவத்தளவே
 ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே
 ஆகுமாம் குணம்.

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவல்ல
நட்டாலும நண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.-----------------------------(மூதுரை- 4)

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்- ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.


தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. குறள் 964:  மானம்
சாலமன் பாப்பையா உரை:நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். குறள் 952:  குடிமை 

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. குறள் 957: 

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.         குறள் 958:  குடிமை 



 உயர்கல்வி என்பது தக்ககுரு பரம்பரையாக அதாவது குருவினுன் வீட்டோடு தங்கி பல ஆண்டுகாலம் படிக்க வேண்டும் என்பதுதான் 17ம் நூற்றாண்டு வரை உலகம் முழுக்க இருந்த நிலை எனவே கல்வி கிட்டத்தட்ட பரம்பரை என்ற நிலை வந்தது அதனால் சமுதாயத்தில் வர்ணப் பிரிவுகள் பிறப்பின் என்ற நிலை ஏற்பட்டது இது சமுதாயத்தில் ஏற்பட்ட நிலையை அதை அதை உறுதிசெய்ய இடை சாதிகளுக்கு மிகவும் வசதியான வர்ணாசிரமம் என்பது கடவுள் கொடுப்பது என்பது ஆனால் நீங்கள் கொடுத்த பாடல்
அதாவது பிராமணன் முகத்தில் என்று தோன்றினான் என்றால் அவன் மூளையை பயன்படுத்துகிறான் என அர்த்தம் அதே போல என் தோளிலிருந்து பிறந்தான் என்றால் அவன் தோள் வழியே பயன்படுத்துகிறான் என்ற ஒரு உவமை வெளிப்பாடே தவிர அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை காலில் இருந்து பிறந்தவன் என்பது இழிவு எனில் காலின்றி மனிதன் இருக்க இயலுமா இந்த அளவு கூட சிந்திக்காமல், தமிழரின் பணடை தொல்குடி அந்தணரை ஒவ்வொரு பதிவிலும் இனவெறியால் தாக்குவது தேவையற்ற அறிவற்ற மூடத்தனமான செயல்



வைசிய- வாணிகர்/உழவர் பற்றியதானது

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. குறள் 449: பெரியாரைத் துணைக்கோடல்
 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.  குறள் 463:   தெரிந்துசெயல்வகை
 வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.  குறள் 120:  நடுவு நிலைமை
 
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.  
குறள் 1075:
மு.வரதராசனார் உரை:
கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.



குறள் 1074:
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
மு.வரதராசனார் உரை:
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்

Thursday, April 9, 2020

தமிழை சிதைக்க திருக்குறளை கீழமை செய்யும் கிறிஸ்துவம் விற்கும் பி எச்டி பட்டங்கள்




100% church  funded ARCHDIOCESAN CHRISTIAN STUDIES at Christian Tamil Studies of Madras University gave that P.Hd.  to Deivanaygam and not just that  Many more Such P.hd. were issued by Madras Arch Bishop
Viviliam, Thirukkural Saiva Siddhantam Oppaivu-(Tamil) 
Comparative Study of the Bible, Thirukkural and Saiva Siddhanta)-Ph. D. Thesis
 by Dr.M.Deivanayagam-University of Madras-1985
Tamil Bhakti Iyakkathin Thotramum Valarchiyum – Vivilia Oliyil (Tamil) 
(The Origin and Development of Tamil Bhakti Movement (in the Light of the Bible) 
by Dr.D.Devakala – Ph.D. Thesis –University of Madras – 1993
Ilakkiyangalil Moovorumai Kotpadu(Tamil) (Trinity Concept In Tamil Literature) –Ph.D. 
Thesis  by Dr. A. Johnson Thankiah – University of Madras-2003
Siddhar Padalkalum Viviliyamum (Tamil)(Songs of Tamil Siddhars and the Bible)
 Ph.D. Thesis by Dr. Moses Michael Farradey – University of Madras.-1999
Aru Vagai Darisanangalum Tamilar Samayamum – Viviliya Oliyil (Tamil)-
 (Six Darshanas and the Religion of Tamils – in the Light of the Bible)
 by Dr .J. D. Baskara Doss- Ph.D. Thesis – University of Madras -1998.

டி.செல்லக்கனி  - தமிழ் விவிலிய புதிய ஏற்பாடும் 
 பதிணெண்கீழ்கணக்கு நூல்களும்
அந்தோணி ஜான் - வள்ளுவரும் விவிலியமும் ஓர் ஒப்பாய்வு

வசந்தகுமாரி திருக்குறள் அறத்துப்பால் விவிலியத்தில் நற்செய்தி நூல்கள்  ஓர் ஒப்பாய்வு





















திருக்குறள் கடவுள் வாழ்த்து -உரைக் களஞ்சியம்


 

























Wednesday, April 8, 2020

திருக்குறள் சமணச் சமயம் இல்லயே -பா.வீரமணி

 திருக்குறள் சமணச் சமயம் இல்லயே -பா.வீரமணி

சிறந்த ஆய்வாளர்களுள் சிலர் திருக்குறளைச் சமணம் சார்ந்த நூலென்றும், சமணச் சிந்தனைகளே திருக்குறளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றும் கூறியுள்ளனர். இவர்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேராசிரியர் வையாபுரி பிள்ளை மயிலை. சீனி வேங்கடசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள்ளும், திருக்குறளிலுள்ள சமணக் கருத்துகளைச் சற்று விரிவாக எழுதியவர் மயிலையாரேவர். ஆதலால் மயிலையாரின் கருத்துகளையும், சமணத்தின் சில அடிப்படைக் கொள்கைகளையும் திருக்குறளுடன் ஒப்பிட்டு நோக்குவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும். அவற்றைச் சுருங்க நோக்குவோம்.

‘சமணர் மட்டும் தமது அருகக் கடவுளின் திருவடியைக் கூறும்போதெல்லாம் மலர் போன்ற திருவடி என்று கூறுவது மட்டுமன்றி, மலர்மேல் நடந்த திருவடி என்றும் யாண்டும் கூறியிருக்கின்றனர். ஜைன சமய நூல்களிலிருந்து எடுத்துக்காட்டிய மேற்கோள்களால் ~மலர்மிசை ஏகினான் என்று திருவள்ளுவர் கூறியது, அருகக் கடவுளையே என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக விளங்குகிறது.

‘அறவாழி அந்தணன் என்பவர் யார்? அவர் எந்தக் கடவுள் என்பதை ஆராய்வோம். அறக்கடவுளாகிய அந்தணன் என்று பொருள் கொள்வதைவிட தரும சக்கரத்தையுடைய அந்தணன் என்று பொருள் கொள்வது சிறப்புடையதாகத் தோன்றுகிறது. நூல்களிலே ஜைனருடைய அருகக் கடவுள் அறவாழியை உடையவர் என்று கூறப்படுகிறார். ஆகவே அறவாழி அந்தணன் என்று குறிக்கப்படுவர் ஜைனருடைய அருகக் கடவுள் எனக் கொள்ளத்தகும்”.

மயிலையாரின் இந்தக் கட்டுரை வெளிவருவதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே இலங்கைப் பெரும்புலவரான புலோலி. தில்லைநாத நாவலர், மேற்கண்ட தொடர்களைக் கொண்டு வள்ளுவரைச் சமணரெனக் கொள்வதைத் திறம்பட மறுத்துள்ளார்.

மலர்மிசையெழு தருபொருள் நியதமு முணர்பவர்”--என்று திருஞான சம்பந்த மூர்த்திகளும்,

எரி ஆய தாமரை மேலியங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே”-என்று திருநாவுக்கரசு நாயனாரும்,

போதகந்தோறும் புரிசடையானடி”  -என்று திருமூலர் திருமந்திரத்தானும்,

மனைகமலமற மலர்மிசை யெழுதரும்”--எனத் திருவாய் மொழியில் சடகோபர் கூறுதலானும்,

இம்மூர்த்திகளை யெல்லாம் விடுத்து ‘மலர்மிசை ஏகினான்” என நாயனார் அருகனைக் கூறினார் என்றால் அஞ்ஞான விருத்தியே என்க.”

மேலும் அருகனுக்கு அறவாழி வேந்தன் என்பதன்றி ~அறவாழி அந்தணன்| என்பது பெயரின்மையானும், வேந்தனுக்கும் அந்தணனுக்கும் தம்முள் வேற்றுமை பெரியதாகலானும் அறவாழிவேந்தன் என்பது தரும சக்கரத்தையுடைய அரசன் என்னும் பொருட்டாகலின் சக்ரம் வேந்தனுக்கன்றி, அந்தணனுக்கியைதல் சிறப்பின்றாகலானும், நாயனார் அறக்கடவுளெனும் உருவகப் பொருட்டாகவன்றி, அறச்சக்கரமென்னும் பொருட்டாகக் கூறாமையானும், அருகனுக்கும் அறவாழி அந்தணனுக்கும் வெகுதூரம் என்க” என்று மிக நுட்பாகத் தில்லை. நாத நாவலர் மறுக்கிறார். இம்மறுப்பின் வழி மயிலையாரின் முடிவு சரியன்று என்பதை உணரலாம்.

மற்றும் வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் வாலறிவன், வேண்டுதல் வேண்டாமைஇலான், தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான்| என்று பலவிடங்களில் இறைவனின் பண்புகளை பேசுகிறாரேயன்றி, அவனின் உருவத்தையோ, ஆயுதத்தையோ எங்கும் குறிப்பிட்டார் அல்லர். எனவே, தரும சக்கரம் உடைய அந்தணன் எனக்கொண்டு அது சமணக் கடவுளைத்தான் குறிக்குமெனவும் ‘ மலர்மிசை ஏகினான்” என்பதும் அருகனைக் குறிக்குமென்பதும் பொருந்தா என்பதே உண்மை.

திருக்குறளில் உள்ள இத்தொடர்களைக் கொண்டு வள்ளுவரின் சமயத்தை ஆய்வதைக் காட்டிலும், சமணத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு ஆய்வதே சிறந்தது, ஏற்றது.

சமணச் சமயம் கடவுளை ஏற்பதில்லை. உயிர்களுக்குக் கன்ம பலன்களைப் (வினைகளை) புசிக்க வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கன்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது. ஆனால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால் தான் துன்பங்களையும், விளைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கன்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

வகுத்தான் வகுத்த வகையல்லர்

என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான்| என்பது ஊழைக் குறிப்பதாயினும் ஈங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடைத்து.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும்,
இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,

அறவாழி அந்தணன் தாள் சோந்தார்க் கல்லால் – 8 என்றும்,
பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,

திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் எனறே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளுவம் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே? இ•து அடிப்படை மாறுபடன்றோ!

மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லை என்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். ஆனால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உலையா உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது அதன் துணிபு. இதுவும் சமணத்துக்கும் வள்ளுவத்துக்கும் அடிப்படையிலுள்ள முரணாகும். வள்ளுவர் ஊழுக்கெதிராக ஆள்வினையுடைமையை வகுத்திருப்பது இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். பெளத்தம் கூட, ஊழை வெல்ல வேண்டுமெனக் கூறியிருந்தாலும், யாமறிந்த வரையில் மனித முயற்சிக்கு (ஆள்வினைக்கு) வள்ளுவம் தந்த அழுத்தத்தை அது தரவில்லை என்பதே உண்மையாகும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள்.619) என்றும்,

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் -(குறள் 620) ; என்றும்

வள்ளுவம் பெரிதும் வலியுறுத்துவது, சமணத்துக்கு முற்றிலும் மாறானது.இக்கூற்று இந்தியத் தத்துவ மரபுக்கே சிறப்புத் தருவது.

சமணத்தின் உயிர்க்கொள்கை துறவறமேயாகும்.

சமணர் என்றாலே துறவி என்றே பொருளாகும். துறவு பூண்டோரே வீடுபேறு அடைவர் என்பது சமணக் கொள்கை. சமணத்தைப் போன்று பெளத்தம் அத்துணைக் கடுமையாகத் துறவறத்தைக் கூறாவிடினும், ஆய்வாளர்கள் இரண்டு சமயங்களையும் துறவறச் சமயங்களென்றே கூறுவர். வள்ளுவம் துறவறத்தை மேற்கொள்வது உண்டு. வள்ளுவர் அனைத்துப் பகுதியினர்க்கும் அறம் கூற விழைந்தவராதலின், அவர் துறவறத்துக்கும் ஓரளவு இடம் தந்தார். எனினும் இல்லறத்தையே பரிதும் போற்றினார்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஓய்ப் பெறுவது எவன் (குறள் – 46)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் (குறள் – 159)
இன்னாச் சொல் நோற்கிற்பவர்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்டும் (குறள் – 50)

இக்குறட்பாக்களின் வழித் துறவறத்தைத் தவிர்த்து இல்லறத்தை எப்படிப் போற்றி வலியுறுத்துகிறார் என்பதை நன்கு தெளியலாம். இவையாவும் சமணத்துக்கு மாறானவையாகும்.

அறத்துப்பாலிலுள்ள 38 அதிகாரங்களில் துறவறத்துக்கு 15 அதிகாரங்களும், 22 அதிகாரங்கள் இல்லறத்தார்க்கும், ஓர் அதிகாரத்தை இரு அறத்தார்க்கும் கூறியுள்ளார். ஏனைய பொருட் பாலிலும், காமத்துப் பாலிலும் உள்ள அதிகாரங்கள் யாருக்கு உரியன என்பதைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை. இவற்றிலிருந்து வள்ளுவரின் சமணத்துக்கு மாறான இல்லறக் கோட்பாட்டை நன்கு உணரலாம்.

சமணம், அச்சமயத் துறவிகளுக்கு ஏழு தர்மங்களை விதித்தது.  அவர்கள் யதிதர்மம் என்றார். அவை உலோசம், திகம்பரம். நீராடாமை, தரையிற் படுத்தல் பல் தேய்க்காமை, நின்று உண்ணல், ஏக புக்தம் என்பர்.

வள்ளுவம் இவற்றிற்கு மாறானது.உலோசம் என்பது தலையிலிருந்து மயிரைக் களைவதாகும். . வள்ளுவரோ மழித்தலும் நீட்டலும் வேண்டா – 280 என்று கூறியிருப்பதால் உலோசத்தை அவர் ஏற்கவில்லை என்பதை உணரலாம்.

திகம்பரம் என்பது ஆடையின்றி இருப்பதை குறிக்கும். வள்ளுவரோ ‘ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல – 1012 என்றும் ‘உடுக்கை இழந்தவன் கைபோலும் – 788 என்றும், உடையின் இன்றியமையாமையைக் கூறுவதால் வள்ளுவர் திகம்பரத்துக்கு மாறானவர் என்பதை அறியலாம். மற்றும் அவர் புறந்தூய்மை நீரான் அமையும் – 298 என்று கூறுவதால் சமணம் கூறும் நீராடாமையை ஏற்கவில்லை என்பதை உணரலாம். மென்தோள் துயிலின் இனிது கொல் – 1191 என்று அவர் கூறுவதாலும், தரையிற் படுத்தலை எங்கும் கூறாததாலும், அதற்கு அவர் மாறானவர் என்றும் தெளியப்படும். நின்று உண்ணல், ஏக புக்தம் (ஒரு வேளை மட்டும் உண்ணல்) இவற்றை வள்ளுவர் துறவறத்திலோ, மருந்து அதிகாரத்திலோ குறிப்பிட்டார் அல்லர். . அகத்தூய்மையும், புறத்தூய்மையையும் வலியுறுத்தும் அவர், பல் தேய்க்காமையை விரும்புவாரா? மாட்டார். ‘பணிமொழி வாலெயீறு ஊறியநீர் 1121 என்ற குறட்பாவிலுனுள்ள “வாலெயிறு” என்பது தூய்மையான பற்களையே குறிக்கும். இதிலிருந்து பல்தேய்க்காமையை அவர் சிறிதும் விரும்பாதவர் என்பதை உணரலாம்.

சமணர் இரத்தன திரயத்தை முக்கியக் கோட்பாடாய் கூறுவர். இரத்தன திரயம் என்பது நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் கியவையாகும். இவற்றைச் சமணர் நோக்கிலோ, இரத்தன திரயப் பொருளிலோ அவர் எங்கும் விளக்கினார் அல்லர். வள்ளுவம் கூறும் கூடாவொழுக்கம், அவா அறுத்தல், மெய்யுணர்வு கியவை இரத்தன திரயத்திற்கு வேறானவை. இரத்தன திரயத்துக்கு மாற்றாக வள்ளுவர்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய் -(குறள் 360)     என்பவற்றைக் குறிப்பிடுவதால் அவர் மாற்றுக் கொள்கையுடையவர் எனக் கூறலாம்.

சமணர் இன்னா செய்யாமையை, எல்லை கடந்து அதீத உணர்வில் வலியுறுத்தினர். மூக்கின்வழி காற்றை உட்கொண்டால், காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்பதற்காக மூக்கில் துணியைக் கொண்டு மூடிக் கொண்டனர். மரங்களைச் செதுக்குவதாலும், கொளுத்துவதாலும், மரத்திலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்பதற்காகத் தச்சுத் தொழிலை அவர்கள் தடை செய்தனர். இதனால், பூமியை உழுதால், மண்ணிலுள்ள புழு பூச்சிகள் அழிந்துவிடும் என்பதற்காக உழவுத் தெழிலில் சமணர்கள் ஈடுபடக்கூடாதென அவர்கள் விதித்தனர். மனுநீதியோ உழவுத்தொழிலை இழிந்தோர் தொழில் என்றது.

உழவுத்தொழிலை மனுநீதி மறுத்தற்கும், சமணம் மறுத்ததற்கும் வேறுபாடு உண்டு. சமூகத்தில் சமநீதி ஏற்படாமல் இருக்க மனுநீதி அதனை இகழ்ந்தது. சமணமோ, வரம்பு கடந்த இரக்கத்தை முன்னிட்டு மறுத்தது. னால், வள்ளுவமோ உலகியல் நடப்பைக் கொண்டு உழவுத் தொழிலைப் போற்றியது.

சுழற்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் – 1031)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் – 1033)

-இக்குறட்பாக்களின் மூலம் வள்ளுவம் சமணத்துடன் எத்துணை மாறானது என்பது பெறப்படும்.

மேலும், சமணம் பெண்களைத் தாழ்ந்த பிறவியாகக் கருதியது. பாவம் செய்தவரே பெண்ணாகப் பிறக்கின்றனர் என்றும் கூறியது. பெண் வீடுபேறு அடைய வேண்டுமாயின், அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்தால்தான் முடியும் என்றது. இவை போன்ற கருத்துகளைச் சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற சமண நூல்களிலும் காணலம். வள்ளுவம் இவற்றிற்கு முற்றிலும் மாறானது.

வள்ளுவம், பெண்களின சிறப்பை எண்ணி ‘வாழ்க்கைத் துணைநலம்” என்ற அதிகாரத்தை வகுத்து ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள -54 என்றும், வேறொரு அதிகாரத்திலும் ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொணடொழுகின் உண்டு -974 என்றும், மதித்துப் போற்றியது. சமணம் காமத்தை இகழ்ந்து கடிந்தது. வள்ளுவமோ, இருபத்தைந்து அதிகாரங்களை வகுத்துக் காமத்தின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது. இவ்வாறு, பல்லாற்றான அடிப்படையில் சமணத்துக்கு மாறான கருத்துகளை வள்ளுவம் வலியுறுத்தியிருக்க, மயிலையார் போன்றோர் வள்ளுவத்தில் சமணக் கருத்துகளே மிகுந்து தோன்றுகின்றன. என்று கூறியிருப்பது ஏற்க முடியாததேயாகும்.

பா.வீரமணி






Monday, April 6, 2020

இயல்புடைய மூவர்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 

 நல்லாற்றின் நின்ற துணை                            (குறள்  41; இல்வாழ்க்கை )

 இல்லறத்தில் வாழ்வான் தன் அறவாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர், துறவிகள் மற்றும் மனைத் தவநிலையில் உள்ள மூவக்கும்   நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான்

நம் மரபில் இல்வாழ்க்கை என்பது சமூகத்தில் அறம் வளர உதவவே, அதைத் தெளிவாய் வள்ளுவர் இக்குறளிலேயே நல்லாற்றின் நின்ற துணை என்கிறார்,

 இல் வாழ்க்கை என்பது குடும்பம் நடத்துபவன்,   நல்லாற்றின், நல்ல அறம், சமுதாயத்தில் இல் வாழ்வானினுடையது கூறுகிறார் தவிர - தன் குடும்பத்தை பராமரிப்பது அவன் கடமையும் எனவே இதில் நேரடியாய் குடும்ப உறுப்பினர்களைக்  பிரித்துக்  குறிக்கவில்லை என்பது தெளிவு, இதை விளக்க அடுத்த குறளைப் படித்தால் போதும் - (துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்  இல்வாழ்வான் என்பான் துணை), அடுத்த குறள் - ஐம்புலத்தார் ஓம்பல் எனக் கூறுகையில் குடும்பத்தை ஒக்கல் என நான்காவதாய் அனைத்து குடும்ப உறுப்பினரையும் போட்டு விட்டார்.

வள்ளுவர் இல்வாழ்வை இல்லறம் என்ற சொல்லை குறளில் சொல்லவே   இல்லை., நல்லாறு என்பது சமுதாயக் கடமை தான். திருவள்ளுவர் இந்திய தத்துவ ஞான மரபு வழியினர், எனவே அறிவு சார்பு வழியினர்,  அவர் இங்கு இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

சமண சமயத்தை சேர்ந்த மணக்குடவர் உரை திருவள்ளுவர் குறள் எழுதி 100 ஆண்டுக்குள் எழுதப் பட்டது - சமணர் உரை.


நாம் மேலே பார்த்ததில் சமணர் உரை பார்த்தோம், பரிமேலழகருக்கு முந்தைய  பரிபெருமாள்   உரை
                                           Iyalpudaiya%2Bmuuvar%2B1p%2B%25281%2529.
                                                            பருதியார் உரை
                                                 
  இல்வாழ்க்கை -மணக்குடவர் அதிகார விளக்கம்:  
இல்வாழ்க்கையாவது இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழும் திறன் கூறுதல்.மேல் அறஞ் செய்கவென்றார் இது முதலாக அறஞ் செய்யுமாறு கூறுகின்றாராதலின், இது பிற்கூறப்பட்டது.

பாரத நாட்டின் தத்துவ ஞான மரபின் சாரமே வள்ளுவம், இந்த மெய்ஞான மரபில் திருமணம் - இல்வாழ்வு என்பது சமூகத்தினை காக்கவே  

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. குறள் 81:விருந்தோம்பல்

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவது  ல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

திருவள்ளுவர் 1330 குறட்பாக்களில் எங்குமே இல்லறம் எனும் சொல்லை பயன்படுத்தவில்லை. இல்வாழ்க்கையில் குடும்பம் காப்பது அன்புச் செயல், ஆனால் நல்லாறு என்பது சமூகத்தில் அறம் செய்வது
                 
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. குறள் 212: ஒப்புரவறிதல்

 தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. குறள் 86: விருந்தோம்பல்
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்து இருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.           குறள் 84: விருந்தோம்பல்
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

வள்ளுவர் மனைவி, குழந்தைகள் பேணல் பற்றி தனி அதிகாரங்கள் கொடுத்தவர் இந்த அதிகாரத்தின் எந்த குறட்பாவிலும் குடும்பத்தோர் முக்கியம் என கூறவே இல்லை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.                      குறள் 45: இல்வாழ்க்கை
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.


நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.          குறள் 242: அருளுடைமை
நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.

19ம் நூற்றாண்டு முதல் கல்வி கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.

மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்
                                 - திரு வி க, வ சுப மாணிக்கம், இரா சாரங்கபாணி, குழந்தை
இளையர், முதியோர், பெண்கள் - ச தண்டபாணி தேசிகர்
உறவினர், நண்பர், ஏழைகள் நாமக்கல் இராமலிங்கம்.
பார்ப்பான், அரசன், வணிகன் தேவநேயப் பாவாணர்
சைவர், வைணவர், வைதிகர் 
அல்லது அரசன், ஆசான், ஆன்றோர் - மு கோவிந்தசாமி
 அறவோர், நீத்தார்,  அந்தணர் - கா அப்பாத்துரை
மாணவர், தொண்டர், அறிவர் - சி இலக்குவனார்
தாய், தந்தை, தாரம்           வ உ சிதம்பரம், இரா இளங்குமரன்


பெற்றோர், துணைவி, மக்கள் 
                          - கு ச ஆனந்தன், நெடுஞ்செழியன், கலைஞர், சுஜாதா.
கல்வி நிலை, மனைத் தவநிலை, துறவுநிலை நிற்பார் -கா சு பிள்ளை

குடும்பத்தாரைப் பிரித்து தாய், தந்தை, மனைவி, மகன் என்றெல்லாம் பிரிப்பதோ, தொடர்பற்று ஜாதிகளை திணிக்கும் கிறிஸ்துவ வெறி தேவநேயர் உரைகளோ வள்ளுவர் உள்ளம் இல்லை.

மேலும் பெருஞ்சித்திரனார் அடுத்த குறளில் சொன்ன துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் ஆகியோர் தான் என இக்குறளின் தமிழ் மரபின் இயல்புடைய மூவரை தராமல் குறளின் தன்மையை சிதைக்கிறார்

தமிழர் மெய்யியல் மரபு, வேதங்கள், இறை வணக்கம் என்பதை மாற்ற எத்தனை பாடுபடல்- எல்லாருமே  கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.

நல்லாற்றின் நின்ற துணை - திருவள்ளுவர் மிகத் தெளிவாய் ஒருவர் இவ்வுலகில் வாழ்வது எளியோர்க்கு உதவி புகழ் பெறவே என்பார். 

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு.          குறள் 231:  புகழ்
எளியோர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

இல்வாழ்வில் உள்ளோர் முதல் கடமை  செய்யும் தகுதியை கணவர் கோவலான் கொலையால் இழந்தேன் என கண்ணகி புலம்புவாள். 
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
                                         6. கொலைக்களக் காதை -சிலப்பதிகாரம்

கல்வி - மாணவர் எப்படி இருக்க வேண்டும்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.                   குறள் 395:கல்வி

செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

தமிழர் மெய்ஞான மரபில் மனித வாழ்க்கைய
கல்வி பயிலும்மாணவப் பருவம்
திருமணம் செய்து இல்வாழவு காலம்
மனத் தவ நிலை

முற்றும் துறந்த முனிவர்

இங்கே இல்வாழ்வான் மற்ற மூவர்க்கு உதவ வேண்டிய கடமையை வள்ளுவர் கூறுவதை தமிழர் மரபினாலது