வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
வள்ளுவம் வழி
Sunday, May 21, 2023
வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - திருவள்ளுவர் கூறுவது என்ன?
Tuesday, September 27, 2022
திருக்குறள் போற்றும் சனாதன தர்மம்
சனாதனம் என்றால் நிலையானது, என்றும் தொடர்வது என்பது பொருள். தர்மம் என்பதற்கு நல்ல வழிமுறை எனப் பொருள் எளிதாக அறம்.
சனாதன தர்மம் என்றால் எப்போதும் கடை பிடிக்க வேண்டிய அறக் கடமைகள், கோட்பாடுகள். இந்தியா முழுவதும் மக்கள் மெய்யியல் வழிமுறையைக் குறிக்கும் சொல்;. இந்து மதம் என்பது எளிதான பெயர்.
திருவள்ளுவர் இயற்றிய குறட்பா வழியிலேயே பார்ப்போம்
மனிதப் பிறவி என்பது குற்கிய காலம் வாழ்வது; ஆனால் உயிர் என்பது நிலையானது, பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது. இதை வள்ளுவர் மன்னுயிர் எனக் கூறுவார். இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு தூங்குவது போன்றது, பிறப்பு எனப் படுவது தூக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது.
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை.
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது.
இந்த நிலையான பிறப்பு ஏற்படக் காரணம் அறியாமை எனும் மயக்கம், மீண்டும் பிறவாத நிலை அடைவதே மனித அறிவின் செயலாக இருக்க வேண்டும்.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு. குறள் 358. மெய்யுணர்தல்
மீண்டும் மீண்டும் பிறப்பு எனும் அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
நிலையான மனித உயிர்- ஆன்மா இறைவனை அடைய அற்ம் செய்து கொண்டே இருக்க வேண்டும், அது மரணத்திற்குப் பின்பும் தொடரும்
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். குறள் 335:அறன்வலியுறுத்தல்.
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள்36:அறன்வலியுறுத்தல்.
இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே மரணத்திற்குப் பின் உடல் அழியும் காலத்திலும் அழியாத் துணையாகும்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38: அறன்வலியுறுத்தல்.
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் மீண்டும் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்
Tuesday, August 23, 2022
திருவள்ளுவர் காலம்-- தமிழகஅரசு கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை திறப்பின் போது வெளியிட்ட நூலில் கட்டுரை
திருக்குறள் தமிழ் நன்கு வளர்ச்சி அடைந்து மொழி நிலை யாப்பு நெகிழ்வு அடைந்த பின்பு ஆண்டு பொஆ.9ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டது என்பது தற்பொழுது பன்னாட்டு பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர்களின் கருத்தாக அமைந்துள்ளது
திருவள்ளுவர் காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்; மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்; என்று கூறுவது தான் வள்ளுவர்க்குப் பெருமையென்று சிலர் எண்ணுகின்றனர். இப்படிக் கூறுவதுதான் தமிழர்க்குப் பெருமை; தமிழர் நாகரிகத்திற்கு உயர்வு; என்று கருதுகின்றனர் சிலர்.
ஒரு புலவர்க்குப் பெருமை ஏற்படுவது காலத்தின் பழைமையைப் பொறுத்தது அன்று; ஒரு நூலுக்கு மதிப்பு உண்டாவது மிகப் பழைமையான நூல் என்பதால் மட்டும் அன்று, பிற்காலத்திலே பிறந்த நூலானாலும், முற்காலத்திலே. தோன்றிய நூலானாலும் மக்கள் வாழ்க்கையோடு இணைத்து நின்று அவர்களுக்கு வழி காட்டும் நூலே சிறந்த நூலாகும். அத்தகைய நூலை ஆக்கிய அரும்புலவரே முதற் புலவர் ஆவார். இந்த உண்மையை உள்ளத்திலே கொண்டவர்கள் திருவள்ளுவர் காலத்தைப் பற்றிக் கலக்கம் கொள்ள வேண்டியதில்லை.
திருக்குறள் சங்க இலக்கியங்களுக்குப் பின்னே பிறந்ததாயினும் இது ஒப்பும் உவமையும் அற்ற உயர்ந்த நூல். இது: போன்ற நூல் திருக்குறளுக்கு முன்னும் தோன்றியதில்லை; பின்னும் பிறந்தது இல்லை. இது அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை.
(சாமி சிதம்பரனார் 1930களில் ஆண்டுகளுக்கு திராவிட/சுயமரியாதை இயக்க இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை அவற்றுள் சில. இவை தவிர தினமணி, வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 1936-38 காலகட்டத்தில் அறிவுக்கொடி என்னும் பத்திரிக்கையை கும்பகோணத்தில் நடத்தினார். 1939 வரையான பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “தமிழர் தலைவர்” என்னும் பெயரில் வெளியிட்டார். இந்நூல் இன்று வரை பெரியார் ஆய்வாளர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. 1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார். திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை மறுத்து இருவரும் ஒரே இனம் என்ற கருத்தை வலியுறுத்தினார். சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையல்ல என்றும் பிற்காலத்தியவை என்றும் நிறுவ முற்பட்டார். இளங்கோவடிகள் செங்குட்டுவனின் உடன்பிறந்தவர் அல்லர் எனவும் சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சேரன் செங்குட்டுவனின் வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விசயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர்பாற் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் திணிக்கப்பட்ட புனைவு என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். 1950 களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தி யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.)
Friday, February 25, 2022
திருக்குறளும் ஜாதியும். மேல் குடியில் பிறந்தவரோகுடிமை நட்பு,
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: நட்பாராய்தல்.
மணக்குடவர் உரை:ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க. இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம்.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794:நட்பாராய்தல்.
மணக்குடவர் உரை:மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்.
மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
குன்றுவ செய்தல் இலர். குறள் 954: குடிமை
மணக்குடவர் உரை:பல கோடிப் பொருளைப் பெறினும் உயர்குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார். இது சான்றாண்மை விடாரென்றது.
மு. வரதராசன் உரை:பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை:கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. குறள் 957: குடிமை
மணக்குடவர் உரை:உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.
மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை:நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.
குலத்தின்கண் ஐயப் படும். குறள் 958: குடிமை
மணக்குடவர் உரை:ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின் அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.
மு. வரதராசன் உரை:ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
சாலமன் பாப்பையா உரை:நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். குறள் 959: குடிமை
மணக்குடவர் உரை:வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும். அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.
மு. வரதராசன் உரை:இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.
திருக்குறள் மாண்பினைக் காப்பாற்றிய G.P.ஸ்ரீநிவாசன் அமரர் ஆனார்
திருக்குறளை சிற்மை செய்ய கிறிஸ்துவ திராவிடியார் கூட்டம் செய்த முயற்சியை முறியடிக்க சென்னை பல்கலைக் கழக திருக்குறள் துறை தவறியது.
மதுரை பல்கலைக் கழகத்தில் கூட பள்ளுவர் போற்றிய மெய்யியல் மரபை ஏற்காத திராவிடியார் நாவீன புலவர் தவர, தருமை ஆதின மடத்தில் விவாதத்திற்கு மோசடி முனைவர் தெய்வநாயகம் அழைக்கப் பட்டார். அவர் வந்து பலி கோட்பாடு, வேள்வி கோட்பாடு, பலி நிறைவேற்றக் கோட்பாடு, மூவொருமை என ஆரம்பித்த எதுவுமே வள்ளுவத்தில் இல்லை என புலவர்கள் காட்டிக வெறுமனே நின்று இருந்து சில மாதம் கழித்து தான் வென்றேன் என தன் பத்திரிக்கையில் சுவிசேஷமாகப் பொய் பரப்பினார். அதை முறியடிக்க தருமை ஆதினம் மற்றும் பலரைக் கண்டு தயாரித்த ஆவணக் காணொளி
ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீநிவாசன் 11.02.2022 மதியம் திருநாடு அலங்கரித்தார்
அமைதி அறிவுபூர்வ ஆழ்ந்த சிந்தனையுடன் அகிம்சை வழி போராளியாக எளியவராக நடமாடும் நூலகராக சிறந்த வாசகராக மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்த நண்பர் விஷ்ணு பாதம் அடைய பிரார்த்தனை செய்கிறேன்
சேது சமுத்திரத் திட்டம்
https://kalyan97.wordpress.com/2007/09/19/812/
https://sites.google.com/site/hinduthought/
Friday, January 21, 2022
திருக்குறளில் பேய்
பேஎய்கண் டன்னது உடைத்து. குறள் 565: வெருவந்தசெய்யாமை.
தன்னைக் காண வருவார்எளிதில் காண முடியாதவனாகவும், கண்டால் கடுகடுத்த முகத்துடனும் இருப்பவன் பெருஞ்செல்வம், பேய் (பூதத்தால்) கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. தகையணங்குறுத்தல். குறள் 1081
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
மு. கருணாநிதி உரை:
எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.
சாலமன் பாப்பையா உரை:
அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.
Tuesday, December 21, 2021
திருக்குறளில் அறக் கடவுள்
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். குறள் 77: அன்புடைமை.
சாலமன் பாப்பையா உரை:எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. குறள் 130: அடக்கமுடைமை.
கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறக்கடவுள் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. குறள் 204: தீவினையச்சம்.
சாலமன் பாப்பையா உரை: மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. குறள் 1018:நாணுடைமை.
மணக்குடவர் உரை: உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.